வீட்டில் நாம் என்ன தான் சமைத்துக் கொடுத்தாலுமே கூட, இந்த ஸ்நாக்ஸ் வகைகள் என்று வரும் பொழுது பெரும்பாலும் அது கடையிலிருந்து வாங்கி சாப்பிடும்படி தான் இருக்கிறது. அதிலும் இப்பொழுதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளை குழந்தைகளும் அதிக அளவில் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தல்ல. இனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் சுவையான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
செய்முறை
இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வறுத்த ரவை, வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரெண்டு சுற்று மட்டும் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். ரவை பவுடராக அரை பட்டு விடும். அதிக பைன் பவுடராக அரைக்க வேண்டாம். இதை அப்படியே வைத்து விடுங்கள்.
அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான பேனை வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்திருக்கும் ரவை பவுடரை சேர்த்து கிளறி தண்ணீர் மொத்தமும் ரவை உறிஞ்சிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு தட்டு போட்டு ஒரு மூன்று நிமிடம் வரை அப்படியே மூடி வைத்து விடுங்கள். இந்த சூட்டிலே ரவை முழுவதுமாக வெந்து விடும்.
இப்பொழுது மூன்று நிமிடம் கழித்து மூடியை திறந்து ரவையை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் பொழுதே கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உருண்டைகள் பெரியதாக இருந்தால் பொரிக்கும் போது வேகாது. அதே சமயத்தில் உள்ளே வெந்தும் வராது எனவே சின்ன சின்ன உருண்டைகளாகவே உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை விட்டு எடுத்து விடுங்கள்.
நல்ல சுவையான கிறிஸ்ப்பியான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார். இதை அப்படியே குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். நல்ல மொறு மொறு என்று சாப்பிட சுவையாக இருக்கும். இதில் கொஞ்சமாக மிளகாய்த்தூள், சாட் மசாலா, லேசாக உப்பு மூன்றையும் கலந்து சாஸ் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடும் பொழுது இன்னும் பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் இன்னுமே கூட விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதையும் படிக்கலாமே: ஜலதோஷமும் தும்பலும் மாறி மாறி வந்து தொல்லை கொடுக்குதா? சட்டுன்னு இந்த தூதுவளை சூப்பை குடிங்க. சளி இருமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.
ரொம்பவே சிம்பிளான அதே சமயம் சுலபமாக செய்யக்கூடிய இந்த ஸ்நாக்ஸை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து வைத்துக் கொண்டால், பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் பிரச்சனையே இருக்காது. இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.