- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்எப்போதும் சாதாரண தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? ரோட்டு கடைகளில் கிடைக்கும் மசாலா முட்டை தோசையை...

எப்போதும் சாதாரண தோசை சாப்பிட்டு போர் அடிக்குதா? ரோட்டு கடைகளில் கிடைக்கும் மசாலா முட்டை தோசையை 5 நிமிடத்தில் நம்முடைய வீட்டிலும் செய்யலாம் வாங்க.

- Advertisement -

இந்த முட்டை மசாலா தோசையை விதவிதமாக நிறைய வகைகளில் செய்யலாம். அதில் மிக மிக எளிமையான முறையில், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வகையில், ஒரு மசாலா முட்டை தோசையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஒரு சில ரோட்டு கடைகளில் இப்படிப்பட்ட முட்டை தோசை கிடைக்கும். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். முட்டையோடு சேர்த்து காய்கறி சாப்பிட்ட திருப்தியும் நமக்கு கிடைக்கும். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு – 1 ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், போட்டு இதன் மேலே சுட சுட ஒரே ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கலக்கி விட்டு விடுங்கள். அதில் இருக்கும் அந்த பச்சை வாடை நீங்கிவிடும்.

- Advertisement -

இதோடு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி, பொடியாக துருவிய – முட்டைகோஸ் 1 கைப்பிடி, கேரட் துருவல் – 1 கைப்பிடி, குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – சிறிதளவு, பச்சை மிளகாய் நறுக்கியது – 2 போட்டு, 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். நமக்கு ஒரு கலவை கிடைத்திருக்கும். இந்த முட்டை வெஜிடபிள் சேத்த கலவை அப்படியே இருக்கட்டும்.

இந்த கலவையை அப்படியே ஒரே முட்டை தோசையில் ஊற்ற போவது கிடையாது. ஒவ்வொரு தோசைக்கு மேலே தேவையான அளவு ஊற்றி முட்டை தோசை வார்க்கப் போகின்றோம். அடுப்பில் கல்லை வைத்து, கல்லை மிதமான சூட்டில் இருக்கும் போது, மெல்லிசாக தோசை வார்த்துக் கொள்ளுங்கள். தோசைக்கு மேலே எண்ணெய் ஊற்றி, மேலே மாவு வெந்து விட வேண்டும். தோசைக்கு மேலே மாவாக இருக்கக் கூடாது.

- Advertisement -

மேல் தோசை மாவு வெந்தவுடன் தயார் செய்து வைத்திருக்கும் இந்த முட்டை கலவையை தோசை மேலே பரவலாக ஊற்றி பரப்பி விடுங்கள். உங்களுக்கு தேவையான அளவு குழி கரண்டியில் எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இதன் மேலே தேவைப்பட்டால் இட்லி பொடி, சாட் மசாலா, கரம் மசாலா, அப்படி இல்லை என்றால் வெறும் மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தூவி கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

இறுதியாக கட்டாயமாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி, தோசையை திருப்பிப்போட்டு ஒரு நிமிடம் போல வேக வைத்து, மீண்டும் திருப்பி போட்டு அப்படியே சுருட்டி குழந்தைகளுக்கு கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இந்த தோசை வயிற்றுக்கு அவ்வளவு திருப்தியாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள கூட சைடு டிஷ் தேவை இருக்காது. அப்படியே சும்மாவே சாப்பிட்டு விடலாம். காரசாரமாக பாதி அளவு வெந்த காய்கறிகளுடன், முட்டை சுவையோடு இந்த தோசைக்கு அத்தனை ருசி. சொல்லும் போதே சில பேருக்கு நாவில் எச்சில் ஊறும். இந்த எளிமையான முட்டை தோசை ரெசிபி பிடிச்சிருந்தா உங்களுக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: ஒரு வாரத்துக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் தேட வேண்டிய அவசியமே இல்லை. வெங்காய சட்னியை ஒரு முறை இப்படி அரைத்து வைத்தால், 7 நாட்களுக்கு கெட்டுப் போகாது.

பின்குறிப்பு: இதே முட்டை தோசையை, ரோடு சைடு முட்டை தோசை கடைகளில், காரச் சட்னியை சேர்த்து செய்வார்கள். தோசைக்கு மேலே நீங்கள் செய்யும் கார சட்னியை பரப்பி, அதன் மேலே ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அதன் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்புத்தூவி, தோசை முழுக்கவும் பரப்பி மேலே கொத்தமல்லி தழை தூவி, வேகவைத்து திருப்பிப் போட்டு வேகவைத்து அப்படியே சுருட்டி கொடுத்தால் அப்பப்பா அது வேற லெவல் டேஸ்ட். இந்த ரெண்டு ரெசிபியுமே வேற லெவல் ரெசிபிங்க. மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்