ஒரு வாரத்துக்கு இட்லி தோசைக்கு சைடிஷ் தேட வேண்டிய அவசியமே இல்லை. வெங்காய சட்னியை ஒரு முறை இப்படி அரைத்து வைத்தால், 7 நாட்களுக்கு கெட்டுப் போகாது.

vengaya-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு தினம் தினம் தொட்டுக்கொள்ள என்ன சைடு டிஷ் செய்வது என்ற குழப்பம் இல்லத்தரசிகளுக்கு இருக்கும். வெங்காய சட்னியை பக்குவமாக இப்படி செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரத்திற்கு கெட்டுப் போகாது. பிரிட்ஜில் தான் வைத்து ஸ்டோர் செய்யப் போகின்றோம். இந்த வெங்காய சட்னியோடு அப்பப்ப தேவைப்பட்டால், இரண்டு நிமிடத்தில் தேங்காய் சட்னியை கூட அரைத்து வைத்து சாப்பிட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, பணியாரம் இவைகளுக்கு சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். வாங்க இந்த அருமையான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் 10 லிருந்து 12 வரமிளகாயில் கொஞ்சம் சூடான தண்ணீரை ஊற்றி ஊற வைக்கவும். வரமிளகாய் 10 நிமிடம் அந்த தண்ணீரில் ஊறட்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்றி, வெறும் 10 – வெந்தயம் போட்டு, அடுத்து கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 15 போட்டு, வதக்க வேண்டும். கடலைப்பருப்பும் உளுந்தம் பருப்பும் பொன்னிறமாக சிவக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்து மீடியம் சைஸில் இருக்கும் – 4 வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். வெங்காயத்தின் பச்சை வாடை முழுமையாக நீங்கி, பிரவுன் கலர் வந்தவுடன் கோலிக் குண்டு அளவு – புளியை எடுத்து பிச்சு இதில் போட்டுக் கொள்ளவும். அடுத்து ஊற வைத்த வர மிளகாய், தண்ணீர் இல்லாமல் வெறும் வர மிளகாய்களை இதில் போட்டு ஒரு நிமிடம் போல கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த வதக்கிய பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, அரைக்க வேண்டும். இந்த சட்னியை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யப் போகிறீர்கள் என்றால், தண்ணீர் ஊற்றி அரைக்கக் கூடாது. அன்றே பயன்படுத்தினால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விழுது போல அரைத்த இந்த சட்னியை தாளித்து வதக்க வேண்டும். அடுப்பில் அடி கனமான ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் கொட்டி, நன்றாக கலந்து விட வேண்டும்.

இரண்டிலிருந்து மூன்று நிமிடம் அந்த எண்ணெயிலேயே சட்னி வதங்கி, தொக்கு போல நமக்கு கிடைத்துவிடும். லேசாக எண்ணெய் பிரிந்து வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆறவைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப் போகாது.

இதையும் படிக்கலாமே: 5 நிமிஷத்துல சட்டுனு கடலை மாவுல நல்ல மொறு மொறுன்னு இப்படி தோசை சுட்டு பாருங்க. இனி தோசை சாப்பிடணும்னு நினைச்ச உடனே டக்குனு இதை செய்திடலாம். டேஸ்ட்டும் செம்மையா இருக்கும்.

நீங்கள் ஓரிரு நாட்களில் இந்த சட்னியை பயன்படுத்தி விடுவீர்கள் என்றால் கொஞ்சம் தண்ணீரை தாராளமாக ஊற்றி கொதிக்க விட்டு இந்த வெங்காய சட்னியை செய்து சாப்பிடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வெறும் வெங்காயத்தை வைத்து காரசாரமான சட்னி தயார். ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. இட்லிக்கு கல் தோசைக்கும் அவ்வளவு அற்புதமான காரசாரமான சைடு டிஷ் இது.

- Advertisement -