- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இப்படி கூட இனிப்பு போண்டா செய்யலாமா? டீக்கடைகளில் விற்கும் அதே சுவையில் பக்குவம் மாறாமல் இனிப்பு...

இப்படி கூட இனிப்பு போண்டா செய்யலாமா? டீக்கடைகளில் விற்கும் அதே சுவையில் பக்குவம் மாறாமல் இனிப்பு போண்டா செய்வது எப்படி?

- Advertisement -

இனிப்பு போண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் இதை டீக்கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். இல்லை என்றால் சில ரோட்டு கடைகளில் இந்த போண்டாவை சுட்டு விற்பார்கள். ஆனால் நம்முடைய வீட்டிலும் இப்படி ஒரு இனிப்பு போண்டாவை சுலபமான முறையில் செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் இனிப்பு போண்டா செய்வது எப்படி. இந்த முறையில் இனிப்பு போண்டா செய்தால் பக்குவமும் தவறாது. சுவையாக மொறுமொறுப்பாக கிடைக்கும். வாங்க அந்த அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் ஒரு அகலமான பேஷன் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் அளப்பதற்கு ஒரு டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த டம்ளரில் மைதா – 1 டம்ளர், ரவை – 1 டம்ளர், அரைத்த சர்க்கரை – 1 டம்ளர், உப்பு – 2 சிட்டிகை, நெய் – 4 டேபிள் ஸ்பூன், ஊற்றி பிசைய வேண்டும்.

- Advertisement -

ரவை மைதா சர்க்கரை நெய் சேர்த்து பிசைந்து விட்டு, மாவுகளை கட்டிகள் இல்லாமல் கலந்து விட்டு, அந்த மாவிலிருந்து ஒரு கைப்பிடி மாவை எடுத்து அப்படியே பிடிக்க வேண்டும். பிடித்துப் பார்த்தால் மாவு உடையாமல் வரும். புட்டுக்கு மாவை பிடித்து பார்ப்போம் அல்லவா. அதே பக்குவத்தில் இந்த மாவும் இருக்க வேண்டும். அப்படி பிடிக்க வரவில்லை, மாவு உடைகிறது என்றால், இன்னும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் அந்த மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

இறுதியாக இந்த மாவில் கொஞ்சமாக காய்ச்சிய பாலை ஊற்றி பிசைய தொடங்குங்கள். சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். ஆனால் சப்பாத்தி மாவு போலவும் அவ்வளவு கட்டியாக பிசைந்து விடக்கூடாது. சப்பாத்தி மாவை விட ஒரு நூல் லூசாக மாவை பிசைந்து, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் சர்க்கரை சேர்த்து இருப்பதால் மிகக் குறைந்த அளவு தான் பால் தேவைப்படும். பால் தெளித்து பக்குவமாக பிசைந்து மாவை, ஒரு மூடி போட்டு 10 நிமிடம் வையுங்கள். காரணம் இதில் ரவை சேர்த்திருப்பதால் அந்த ரவை சிறிது நேரம் ஊறினால் தான் நன்றாக இருக்கும்.

இதற்குள் ஒரு பக்கம் அடுப்பில் எண்ணெயை காய வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய மாவில் இருந்து சிறிய சிறிய உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். உருண்டைகள் தேவையில்லை என்றால் சிலிண்டர் வடிவம், அப்படி இல்லை என்றால் கட்லெட் போல வட்ட வடிவம், உங்கள் விருப்பம் போல இந்த மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் அரிசி மாவு இருந்தா போதும் 10 நிமிஷத்துல உளுந்தே சேர்க்காம உளுந்து வடையை ரெடி பண்ணிடலாம். இனி வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்துட்டா கொஞ்சம் கூட டென்ஷனை ஆகாம இந்த வடைய செஞ்சு அசத்துங்க.

எண்ணெய் காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் மாவை அந்த எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்தால் சூப்பரான போண்டா தயார். ரொம்ப ரொம்ப ஈஸியான ஸ்நாக்ஸ். சாப்பிடுவதற்கு கஜிரா போல சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்