ஒரு கப் அரிசி மாவு இருந்தா போதும் 10 நிமிஷத்துல உளுந்தே சேர்க்காம உளுந்து வடையை ரெடி பண்ணிடலாம். இனி வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்துட்டா கொஞ்சம் கூட டென்ஷனை ஆகாம இந்த வடைய செஞ்சு அசத்துங்க.

- Advertisement -

வடை என்றாலே நமக்கு  தெரிந்ததெல்லாம் இரண்டு வகை. ஒன்று உளுந்து வடை இன்னொன்று பருப்பு வடை. இதை முதலாகக் கொண்டு தான் வெவ்வேறு வடைகள் நாம் செய்து பழகி இருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் பருப்பு சேர்க்காமல் வெறும் அரிசி மாவை வைத்து உளுந்து வடை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு -1 கப், தயிர் -1 கப் வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி – 1துண்டு பொடியாக நறுக்கியது, மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி -1 கைப் பிடி, எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு பௌலில் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் தயிரை ஊற்றிய பிறகு தயிர் அளந்த அதே கப்பில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மாவை கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பேனை வைத்து சூடானவுடன், கரைத்து வைத்த இந்த பச்சரிசி மாவு கலவையை அதில் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை மாவை கைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். கரைத்து ஊற்றிய மாவு தண்ணீர் அனைத்தும் வற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு மாவை ஆற விடுங்கள்.

- Advertisement -

இந்த மாவு நன்றாக ஆறிய பிறகு அரிந்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம் அனைத்தையும் சேர்த்து வடை மாவை பிசைவது போல பிசைந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவிக் கொண்டு வடைகளை தேவையான அளவில் எடுத்து உருட்டி கையில் வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு தட்டில் அடுக்கி வைத்து விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு  நீங்கள் தயார் செய்து வைத்த வடைகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு புறம் நன்றாக சிவந்து வந்தவுடன், இன்னொரு புறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அருமையான ஆரோக்கியம் நிறைந்த எள்ளு சட்னி வீட்டிலேயே இட்லி, தோசைக்கு எளிதாக அரைப்பது எப்படி?

உளுந்து சேர்க்காத அருமையான உளுந்த வடை நிமிடத்தில் தயாராகி விட்டது. வீட்டில் விருந்தளிகள் வந்து விட்டால் அவசரத்திற்கு என்ன செய்வது என்று குழம்பாமல் இந்த இன்ஸ்டன்ட் வடையை செய்து கொடுத்து விடலாம். இது ஈவினிங் டீ டைம் ஸ்நாக்ஸ்கு நல்ல ஒரு சூப்பரான ரெசிபி.

- Advertisement -