- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட இப்படி கூட காபி போடலாமா? தேங்காய் பாலில் நீங்க காபி போட்டு குடிச்சு இருக்கீங்களா?...

அட இப்படி கூட காபி போடலாமா? தேங்காய் பாலில் நீங்க காபி போட்டு குடிச்சு இருக்கீங்களா? இதோ இப்படிதான் தேங்காய் பால் காபி போடணும். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

- Advertisement -

நாம் எல்லோர் வீட்டிலும் மாட்டு பால் காய்ச்சி தானே அதில் காபி போட்டு குடிப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் தேங்காய் பாலை எடுத்து அதில் இப்படி காபி போட்டு குடிச்சு பாருங்க. இதனுடைய சுவை ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கும். நிறைய பேருக்கு இந்த ரெசிபி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இது ஒன்றும் புது ரெசிப்பி அல்ல.

அந்தக் காலத்தில் நம்முடைய அம்மா பாட்டி, கட்டங்காபி, கருப்பு காப்பி சுட சுட போட்டுவிட்டு, அதில் கொஞ்சம் தேங்காய் பாலை கலந்து கொடுப்பார்கள். சில பேர் இதில் டீ தூள் போட்டு கூட தேங்காய் பால் டீயாக குடிப்பார்கள். ஆப்பத்தில், பால் மிச்சமாகிவிட்டால் அதை டீ யில் ஊற்றி குடிப்பார்கள். இப்படி எல்லாம் நாம் அம்மாவும் பாட்டியும் செய்வார்கள். அதே முறையில் தான் நாமும் இன்று தேங்காய் பாலில் காபி போடப் போகின்றோம். வாங்க அந்த ரெசிபி எப்படி செய்யறதுன்னு நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேங்காய் பால் காபி போடும் முறை:
முதலில் ஒரு தேங்காயை உடைத்து அதிலிருந்து ஃபிரஷ்ஷாக தேங்காய் துருவி, மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து திக்காக தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை சூடு செய்ய வேண்டும். கொதிக்க கொதிக்க தேங்காய் பாலை சூடு செய்ய முடியாது. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி நேரடியாக நெருப்பில் வைத்து லேசாக சூடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணி வைத்து அதன் மேலே சின்ன கிண்ணத்தில் தேங்காய் பாலை வைத்து, டபுள் பாய்லிங் மெத்தடிலும் தேங்காய் பாலை சூடு செய்யலாம். அது நம்முடைய விருப்பம்.

அடுத்தபடியா ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டு, இந்த சூடு செய்த தேங்காய் பாலை அதில் ஊற்றி ஒரு ஸ்பூனை வைத்து கலக்கி குடித்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்கும். இந்த காபி சுடச்சுட இருக்காது. வெதுவெதுப்பாகத்தான் இருக்கும். ஆனால் குடிப்பதற்கு அருமையாக இருக்கும். இன்னும் கொஞ்சம் குடிக்க மாட்டோமா அப்படின்னு தோணும் அளவுக்கு நல்ல சுவை இருக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இந்த காபியையும் ஒரு முறை போட்டு குடித்து பாருங்க.

- Advertisement -

தேங்காய் தண்ணீரில் 2 நிமிடத்தில் ஜெல்லி ஸ்வீட்:
தேங்காயை உடைத்த தண்ணீர் இருக்கும் அல்லவா. அதில் சூப்பராக ஒரு ஸ்வீட் செய்யலாம். தேங்காய் தண்ணீரை வடிகட்டி 2 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன டம்ளரில் இரண்டு டம்ளர் அளவு வந்தால் கூட போதும். அதை ஒரு கடாயில் ஊற்றி இந்த தேங்காய் தண்ணீரோடு 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு, 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் தேங்காய் தண்ணீர் குறைவாக இருந்தால் அதற்கு தகுந்தது போல கான்பிளவர் மாவையும் சர்க்கரையும் போட்டு கரைத்து, அதை அப்படியே அடுப்பில் வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கலக்க வேண்டும். கண்ணாடி பதத்திற்கு ஜெல்லி போல இந்த கலவை நமக்கு கிடைக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு சிறிய சில்வர் கிண்ணத்தில் அடியில் நெய் தடவி, தேங்காய் பூ தூவுங்கள். மேலே இந்த ஜல்லியை ஊற்றி விடுங்கள். மீண்டும் மேல் பக்கம் கொஞ்சம் தேங்காய் பாலை தூவி ஒரு தட்டு போட்டு மூடி அப்படியே வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இனிமே குண்டு குண்டா, மொறுமொறுன்னு இந்த மைசூர் போண்டா சாப்பிட ஹோட்டலுக்கு போகவே வேணாம். நம்ம வீட்டிலேயே சட்டுனு செஞ்சிடலாம். இந்த டிப்ஸ் தெரிஞ்சா.

இரண்டு நிமிடம் கழித்து அந்த கிண்ணத்தை எடுத்து அப்படியே கவிழ்த்து போட்டு தட்டினால் சூப்பரான ஜெல்லி கிடைக்கும். கத்தியில் வெட்டி ஸ்பூனில் அப்படியே சாப்பிட்டு விடலாம். தேவைப்பட்டால் இதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கூட சாப்பிடலாம். இன்னும் ருசி கூடுதலாக இருக்கும். இப்படி ஒரு ஸ்வீட்டும், தேங்காய் பால் காபியும் அடடடடா. ஒருமுறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

சற்று முன்