இனிமே குண்டு குண்டா, மொறுமொறுன்னு இந்த மைசூர் போண்டா சாப்பிட ஹோட்டலுக்கு போகவே வேணாம். நம்ம வீட்டிலேயே சட்டுனு செஞ்சிடலாம். இந்த டிப்ஸ் தெரிஞ்சா.

bonda5
- Advertisement -

குண்டு குண்டா மொறு மொறுன்னு, மைசூர் போண்டா சாப்பிட நிறைய பேருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். வீட்டில் செய்தால் கடையில் செய்தது போல குண்டு குண்டா மொறுமொறுப்பாக கிடைக்காது. என்ன செய்வது. கடைக்கு போய் தான் சாப்பிட வேண்டும். பெரும்பாலும் கடையில் வாங்கக்கூடிய இந்த மைசூர் போண்டா எந்த அளவுக்கு ஆரோக்கியமா என்பது நமக்கு தெரியாது. நம்முடைய வீட்டிலேயே மைசூர் போண்டா, நம் கையால் செய்தால் எப்படி இருக்கும். இதோ உங்களுக்கான அந்த ஈசி ரெசிபி.

செய்முறை

முதலில் ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், மைதா மாவு – 1 கப், பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு, சீரகம் – 1/2 ஸ்பூன், ஆப்ப சோடா – 1/4 ஸ்பூன், போட்டு முதலில் இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். அடுத்து 2 கப் அளவு மாவு சேர்த்து இருக்கிறோம் அல்லவா, 2 கப் அளவு மோர் நமக்கு தேவை.

- Advertisement -

2 கப் அளவு – மோரை எடுத்து இந்த மாவில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து விட வேண்டும். இறுதியாக லேசாக சூடு செய்த 2 ஸ்பூன் – எண்ணெயை இதில் ஊற்றி கலந்து ஒரு மூடி போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இந்த போண்டா செய்ய வெறும் கோதுமை மாவை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வெறும் மைதா மாவை பயன்படுத்தியும் செய்யலாம். இல்லை மேல் சொன்னது போல ஒரு கப் கோதுமை மாவு, ஒரு கப் மைதா மாவு சேர்த்து செய்யலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

1/2 மணி நேரம் மாவு ஊறி வந்த பிறகு, அதில் துருவிய இஞ்சி – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய – கருவாப்பிலை கொத்தமல்லி தழை தூவி, நன்றாக கலந்து விடுங்கள். உங்களுக்கு இதில் வெங்காயம் சேர்க்க பிடிக்கும் என்றால் கொஞ்சம் வெங்காயத்தை மிகப் பொடியாக சாப் செய்தும் போட்டு கலந்து வைத்தால், சூப்பரான போண்டா மாவு தயார். இதை எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும்.

- Advertisement -

வழக்கம்போல கடாயில் எண்ணெயை வைத்து சூடு செய்து இந்த போண்டா மாவை கையில் அள்ளியும் போடலாம். அப்படி இல்லை என்றால் குழி கரண்டியில் மோந்தும் அப்பம் பார்ப்பது போல வார்க்கலாம். அது உங்களுடைய சவுகரியம். ஆனால் இப்படி நேரடியாக போண்டா மாவை எண்ணெயில் விட்டால் ஷேப் கொஞ்சம் குண்டு குண்டாக கிடைக்காது.

அதுவே காய்ந்த எண்ணெயை குழி கரண்டியில் எடுத்து, இந்த போண்டா மாவை அழகாக அந்த எண்ணெயில் விட்டு, உருண்டை வடிவம் வந்ததும் அந்த போண்டாவை அப்படியே எண்ணெயில் விட்டீர்கள் என்றால் குண்டு குண்டாக அழகாக போண்டா கிடைக்கும். கடையில் கிடைப்பது போலவே.

இதையும் படிக்கலாமே: இனி ஆப்பம், பணியாரம் செய்ய தனித்தனியாக மாவு அரைக்க வேண்டாம். பச்சரிசியில இப்படி மாவு அரைச்சு வச்சுக்கிட்டா போதும் இரண்டையுமே சூப்பரா சட்டுனு செஞ்சிரலாம்.

பிறகு மிதமான தீயில் போண்டாவை எண்ணெயில் சிவக்க விட்டு எடுத்து தேங்காய் சட்னி, புதினா சட்னியோடு பரிமாறி பாருங்கள். வேறென்ன வேணும் செம டேஸ்ட்ங்க. இந்த போண்டா நிறைய எண்ணெய் கூட குடிக்காது. சாப்பிட சூப்பரான ருசியில் இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க விருப்பமாக சாப்பிடுவாங்க.

- Advertisement -