- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கறிக்குழம்பை கொண்டும் செல்லும்போது கூடையில் அடுப்பு கரித்துண்டை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று நம்...

கறிக்குழம்பை கொண்டும் செல்லும்போது கூடையில் அடுப்பு கரித்துண்டை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூற காரணம் என்ன தெரியுமா?

- Advertisement -

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை நாம் வெகு தூரம் அசைவ உணவை கொண்டு செல்கிறோம் என்றால், கூடையில் ஒரு அடுப்பு கரித்துண்டை போடுவது வழக்கம். ஏன் இப்படி செய்கிறோம் என்று முதியோர்களிடம் கேட்டால், அடுப்புக்கரி இருந்தால் காத்து கருப்பு அண்டாது அதனால் தான் இப்படி செய்கிறோம் என்பார்கள். ஆனால் இதற்க்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அறிவியல் காரணம் ஒளிந்துள்ளது. அது பற்றி தற்போது பார்ப்போம்.

இப்போது தான் எங்கு பார்த்தாலும் நவீனமயமாக உள்ளது. பெரும்பாலான ஊர்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி என எல்லாம் உள்ளது. ஆனால் அன்றைய காலத்தில் ஒரு ஊரை தாண்டி இன்னொரு ஊருக்கு இரவில் பயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் காட்டு வழி பாதை என்றால் செல்லவே தேவை இல்லை.

- Advertisement -

காட்டு வழியில் செல்லும்போது பொதுவாகவே விலங்குகளின் தொல்லை அதிக அளவில் இருக்கும். அதிலும் நாம் அசைவ உணவை கொண்டு செல்கிறோம் என்றால் அதன் வாசனை காரணமாக பல விலங்குகள் தேடி வந்து தாக்க முற்படும். இப்படி விலங்குகளின் தொல்லையில் இருந்து விடுபடவே இந்த அடுப்பு கரித்துண்டு உதவுகிறது.

அடுப்பு கரியில் கார்பன் C2 இருப்பதால் அது வாசனையை ஈர்த்து அதை வெளியில் அனுப்பாது. ஆகையால் நாம் எடுத்து செல்லும் கூடையில் அசைவம் இருந்தாலும் அதன் வாசனை அவ்வளவு எளிதில் கூடையை விட்டு வெளியேறாமல் இந்த அடுப்பு கரித்துண்டு பார்த்துக்கொள்ளும். இதன் காரணமாகவே அக்காலத்தில் இதை அசைவ உணவோடு சேர்த்து எடுத்து சென்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அடிப்பிடித்த பாத்திரத்தை இனி ஊற வச்சு தேய்க்க தேவையில்லை! அதிக செலவு பண்ணாம வீட்டிலேயே இப்படி லிக்விட் செய்து பயன்படுத்தலாம்.

காலப்போக்கில் இதுவே ஒரு பழக்கம் ஆகிவிட்டதால் தற்போதும் இதையே நாம் பின்பற்றி வருகிறோம். நம் முன்னூர்கள் அறிவில் ஆகச்சிறந்த மேதைகளாக இருந்துள்ளனர் என்பதற்கு இது போன்ற சான்றுகள் நம்மிடம் ஏராளமாக உள்ளது. அவர்கள் கூறியதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்த்தோமானால் அவர்களின் அருமை நமக்கு விளங்கும்.

சற்று முன்