அடிப்பிடித்த பாத்திரத்தை இனி ஊற வச்சு தேய்க்க தேவையில்லை! பாத்திரங்கள் பளபளன்னு புதுசு போல மின்ன அதிக காசு கொடுத்து செலவு பண்ணாம வீட்டிலேயே லிக்விட் செய்வது எப்படி?

vessels-washing
- Advertisement -

பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, குளிக்க என்று விதவிதமான சோப்புகள் நம் வீட்டில் பஞ்சமே இல்லாமல் ஸ்டோர் செய்து வைத்திருப்போம். இதில் பாத்திரம் தேய்ப்பதற்கு இப்பொழுது லிக்விட் எல்லாம் அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம். 30 நாட்கள் வரை வரும் என்று கூறினாலும் பத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்கு கூட முழுமையாக இவைகள் வருவதில்லை! நம் வீட்டிலேயே எளிதாக பாத்திரம் தேய்க்கும் லிக்விட் செய்வது எப்படி? அப்படின்னு தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிஞ்சுக்க போகிறோம்.

பாத்திரம் தேய்க்கும் லிக்விட் இதே போல நாம் செய்து வைத்து விட்டால் 30 நாட்களுக்கு மேலே கண்டிப்பாக வரும். அது மட்டுமல்லாமல் அடிபிடித்த பாத்திரத்தை கூட நொடியில் புதுசு போல சுத்தம் செய்து விடக் கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு. ரொம்பவே சுலபமாக தயார் செஞ்சு வெச்சிடலாம். அதிக காசு கூட இதற்கு செலவாகாது. இதை எப்படி தயார் செய்வது? என்று வாங்க பார்ப்போம்.

- Advertisement -

துணி துவைக்க பயன்படுத்தும் 10 ரூபாய் சோப்பு ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சோப்பை கேரட் துருவும் துருவியில் போட்டு துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவி எடுத்த சோப்புடன் நான்கைந்து எலுமிச்சை பழங்களை விதைகள் இல்லாமல் சாறு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பாத்திரம் தேய்க்கும் எல்லா வகையான சோப்பிலும் எலுமிச்சை கண்டிப்பாக சேர்ப்பார்கள்.

இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் ஆப்ப சோடா எனப்படும் சமையல் சோடாவையும் நாலு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொருட்களையும் நன்கு கலந்து விட்ட பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு தண்ணீர் கொதித்ததும் இந்த சோப்பு தூளுடன் தண்ணீரை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

சுடுதண்ணீர் சேர்ப்பதால் சோப்பு கரைய ஆரம்பிக்கும். எல்லா பொருட்களும் நன்கு கரைந்து லிக்விட் பதத்தற்கு வந்து விடும். பின்னர் வடிகட்டி இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான், இந்த பாட்டிலில் இருக்கக்கூடிய லிக்விட் ஒரு பங்கு எடுத்துக் கொண்டால், ஒரு பங்கு சரிசமமாக நாம் தண்ணீர் சேர்த்து பயன்படுத்தலாம். நீண்ட நாட்களுக்கு வரக்கூடிய இந்த ஒரு லிக்விட் பாத்திரத்தை ரொம்பவே எளிமையாக தேய்த்து சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும். அடிபிடித்த பாத்திரத்தை கூட ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை, லேசாக தண்ணீரில் காண்பித்து பிறகு தேய்த்துக் கொடுத்தால் சுலபமாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே:
அட! இவ்வளவு தண்ணி பாலில் கூட கெட்டியான தயிர் அதுவும் ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணலாமா? இத கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

அதிகப்படியான எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரங்கள் மற்றும் பால் பாத்திரம், டீ கறை உள்ள பாத்திரங்களை கூட சுலபமாக கை வலிக்காமல் சுத்தம் செய்து விடலாம். அதிக ஆற்றலுடன் செயல்படக்கூடிய இந்த ஒரு லிக்விட் செய்வதற்கு 25 லிருந்து 35 ரூபாய் தான் ஆகும். நீங்களும் இதே மாதிரி ஒருமுறை ட்ரை பண்ணி வச்சிக்கிட்டா, எல்லா விதமான கிளினிங்கும் யூஸ் செய்து கொள்ளலாம். இதை பாத்திரம் தேய்க்க மட்டும் அல்ல, பாத்ரூம் டைல்ஸ் கிளீன் செய்யக்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அளவிற்கு நல்ல ரிசல்ட் கொடுக்கக்கூடிய இந்த லிக்விட் வீட்டிலேயே நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -