- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபேரும், புகழும் கிடைக்க, இழந்த மரியாதை திரும்ப பெற இந்த பொருளை இப்படி மாட்டினால் போதுமே!

பேரும், புகழும் கிடைக்க, இழந்த மரியாதை திரும்ப பெற இந்த பொருளை இப்படி மாட்டினால் போதுமே!

- Advertisement -

என்னதான் நம்மிடம் காசு, பணம் இருந்தாலும் பேரும், புகழும் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல!! நம் கிரக அமைப்புகள் சரியாக இருந்தால் தான் இவைகளை பெற முடியும். வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும், இழந்த மரியாதையும் திரும்ப கிடைக்க நாம் இவருடைய அருளை பெற வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

நம்முடைய கிரக அமைப்புகள் எப்படி இருந்தாலும், நாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி தொடர்ந்து விடாமுயற்சியை கொடுத்துக் கொண்டிருந்தால், அதற்கு உரிய பலன்களை கண்டு விடலாம். இதனை சுலபமாக பெற்று தரக்கூடிய அமைப்பை தான் இவர் நமக்கு அருள்கிறார். இவருடைய அருள் இருந்தால் நம்முடைய சிரமங்கள் கடந்து சுலபமாக இலக்கை அடைய முடியும்.

- Advertisement -

பேரையும், புகழையும், செல்வாக்கையும் பெற இந்த ஒரு விஷயத்தை வீட்டில் மாட்டி வைத்தால் நமக்கு குறைவில்லாமல் கிடைக்கும் என்பது சூட்சமமான உண்மை ஆகும். இத்தகைய பெயரையும், புகழையும் பெற முதலில் சூரிய பகவான் அருள் தேவை. சூரிய பகவான் அருள் இருந்தால் உடனே வேலையில்லாதவர்களுக்கு கூட நல்ல வேலை அமையும்.

சிலர் அரசாங்க உத்தியோகத்தை எதிர் நோக்கியும், சிலர் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று உத்தியோகம் அல்லது வணிகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இருப்பார்கள். இப்படியான மிகப்பெரும் கனவுகளை நிறைவேற்றக்கூடிய ஒரு வல்லமை இவருக்கு உண்டு. அவர்தான் சூரிய பகவான் ஆவார். சூரிய வழிபாடு தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு தடை இல்லாத முன்னேற்றம் இருக்கும் என்பது ஐதீகம். தினமும் அதிகாலையிலேயே சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து பழக வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுபவர்களுக்கு வெற்றியே உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றி சூரியன் உதிக்கும் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு அல்லல் படும் இந்த துன்ப நிலை மாறும். தொடர் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் தொடர் சறுக்கல்களையும், பெயரையும், புகழையும் இழந்து நிற்பவர்களுக்கு சூரியனுடைய இந்த ஒரு விஷயம் நல்ல ஒரு பலன் தரும். சூரியன் முகம் பதித்த எந்திரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. இந்த எந்திரங்கள் காப்பர் அதாவது செம்பினால் ஆனதாக இருக்க வேண்டும். செம்பினால் ஆன எந்திர தகட்டில் சூரிய உருவம் பதித்த ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
இந்த அட்சய திரிதியை நாளில் உங்கள் வாழ்க்கையில் செல்வ வளம் பலமடங்கு பெருகி கொண்டே இருக்க இதை மட்டும் தவறாமல் செய்தால் போதும். தங்கம் வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.

வியாபாரம் செய்பவர்கள் வியாபாரம் செய்யும் இடங்களிலும், தொழில் செய்பவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும், கிழக்கு நோக்கிய சுவற்றில் மாட்டி வைக்கலாம். சூரிய பகவான் கோவில்கள் அல்லது பெரிய பெரிய ஸ்தலங்களில் இருக்கும் கடைகளில் எளிதாக கிடைக்கும் இந்த யந்திரம் விசேஷமான பலன்களை கொடுக்கக் கூடியது. இதை நாம் கைக்கு எட்டாத அளவிற்கு உயரமாக ஏதாவது ஒரு இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். இதற்கு சந்தன, குங்குமம் இட்டு தினமும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது தூப, தீப ஆரத்தி காண்பித்து வந்தால் உங்களுடைய விடா முயற்சி வீண் போகாமல் வெற்றியை சுலபமாக பெற்று தரும், நினைத்ததை எளிதாக சாதித்து காட்ட உதவி செய்யும்.

சற்று முன்