இந்த அட்சய திரிதியை நாளில் உங்கள் வாழ்க்கையில் செல்வ வளம் பலமடங்கு பெருகி கொண்டே இருக்க இதை மட்டும் தவறாமல் செய்தால் போதும். தங்கம் வாங்கும் யோகம் தானாக உங்களை தேடி வரும்.

- Advertisement -

சமீபகாலமாக இந்த அட்சய திரிதியை நாம் பெரும் விசேஷமான ஒரு நாளாக கருதி அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் அதிகமாக தங்கம் சேரும் என்றும், தங்கம் வாங்க உகந்த நாளாக இதை பார்த்து வருகிறோம். இன்றைய நாளில் தங்கம் மட்டுமின்றி புதிதாக எந்த பொருள் வாங்கினாலும் அது பன்மடங்கு பெருகும். இந்த நாளில் என்னவெல்லாம் வாங்கலாம் என்ன செய்யலாம் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அட்சய திதி அன்று செய்ய வேண்டியவை:
சித்திரை மாதம் 14ஆம் நாள் அக்ஷய திரி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் அட்சய திதி ஆனது ஏப்ரல் 22 அன்று இருந்தாலும் ஏப்ரல் 23 அன்று காலை சூரிய உதயத்தின் நேரத்தில் அட்சய திதி இருப்பதால் ஏப்ரல் 23 அன்றே அட்சய திதி நாளாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நாளில் வாங்கும் எந்த பொருளும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம். எனவே தான் இந்த நாளில் மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தை வாங்கினால் என்ன பலனோ அதே பலன் தரக் கூடியது மஞ்சளும் கல்லுப்பும். இவை இரண்டையும் வாங்கி வைத்து அன்றைய தினத்தில் மகாலட்சுமி தாயாரை வணங்குவது சிறப்பு.

ஞாயிற்றுக்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து மஞ்சள், உப்பை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. (இதை முதல் நாளை வாங்கி வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் பழைய மஞ்சள் குங்குமத்தை பயன்படுத்தக் கூடாது) செய்ய முடியாதவர்கள் அன்றைய தினத்தில் ராகு காலம் எமகண்டம் எந்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த வழிபாடை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அன்றைய தினத்தில் நாளை 6 மணிக்கு மேல் 8:30 மணிக்குள்ளாக குத்து விளக்கை ஏற்றி வைத்து, அதை மகாலட்சுமி தாயாராக பாவித்து குங்கும அர்ச்சனை அல்லது பூக்களால் அர்ச்சனை போன்றவை செய்வது மிகவும் சிறப்பு. இந்த நேரத்தில் வெள்ளை நிறத்தில் ஆன இனிப்பு செய்து வைத்து வழிபாடு செய்யலாம். இந்த வழிபாட்டை மாலையில் செய்ய முடியாதவர்கள் காலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்யும் போது இதையும் சேர்த்து செய்யலாம்.

இன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியம் தானம். தங்கத்தை வாங்கும் போது எந்த அளவுக்கு நமக்கு சுபிட்சம் பெறுவோமோ அதை விட பல மடங்கு சுபிட்சம் தரும் இன்றைய தினத்தில் நாம் செய்யும் இந்த தானம்.

- Advertisement -

தானம் என்றால் தங்கம், வெள்ளிகளை வாரி வழங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அரிசி, பருப்பு, கோதுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நம்மால் இயன்ற அளவு யாருக்காகவது வாங்கி கொடுப்பது. இது இந்த வருடம் முழுவதும் உங்களுக்கான சுபிக்ஷசத்தை வாரி வழங்குவதற்கான யோகத்தை கொடுக்கும். அதே போல் இன்றைய நாளில் ஆலயம் சென்று வணங்கி அங்கே யாரேனும் ஒருவருக்காவது ஒரு வேளை உணவை வாங்கி கொடுப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வாஸ்து சாஸ்திர படி மறந்தும் கூட இவையெல்லாம் பகிரவே கூடாது. பகிர்ந்தால் துரதிஷ்டத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அதுவே உங்களை தேடி வந்து விடும்.

அட்சய திதி நாள் என்றாலே தங்கம் வாங்குவது மட்டும் தான் என்ற எண்ணம் பலரின் மனதிலும் பதிந்து விட்டது. ஆனால் அதை விட முக்கியம் அன்றைய தினத்தில் நாம் மகாலட்சுமி தாயார் நினைத்து செய்யும் இந்த வழிப்பாடும், அன்றைய தினத்தில் நாம் செய்யும் இந்த தானமும். இது தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலனை கொடுக்கும். இந்த அட்சய திதி பொன்னாளில் இது போன்ற நல்ல காரியங்களை துவங்கி, இந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்காக வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -