- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரே ஒரு கப் கஞ்சி தண்ணீர் இருந்தால் போதும் உங்கள் முகத்தை அப்படியே வெண்மையாக மாற்றிவிடலாம்....

ஒரே ஒரு கப் கஞ்சி தண்ணீர் இருந்தால் போதும் உங்கள் முகத்தை அப்படியே வெண்மையாக மாற்றிவிடலாம். அதோடு முக அரிப்பு, முக வறட்சி போன்றவற்றையும் நீக்கி விடலாம்.

- Advertisement -

கஞ்சி தண்ணி அழகு குறிப்பு

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருள் தானியமாக இருப்பது அரிசி. அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக அரிசியை நாம் சாதமாக வடிக்கின்ற பொழுது கிடைக்கின்ற, கஞ்சி தண்ணீரில் பல சத்துக்கள் இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கஞ்சி தண்ணீரை உணவாக மட்டுமல்லாமல், பெண்கள் தங்களுக்கான முக அழகை மேம்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்த முடியும் என்பது பலரும் அறிந்தராத ஒரு விடயமாக உள்ளது. அந்த வகையில் கஞ்சி தண்ணீரை கொண்டு செய்து கொள்ள கூடிய எளிமையான அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

முகம் வறண்டு போகாமல் இருக்க கஞ்சி தண்ணி

உங்கள் வீட்டில் தினந்தோறும் அரிசியை சாதமாக வடிக்கின்ற பொழுது மீதமாகும் கஞ்சி தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அடைத்து, உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். கோடை காலங்களில் காலை, மதியம், மாலை வேலைகளில் அவ்வப்பொழுது இந்த கஞ்சி தண்ணீரை பெண்கள், தங்களின் முகத்தில் ஸ்பிரே செய்து முகம் முழுவதும் நன்கு தடவி விட வேண்டும். ஒரு 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம்.

- Advertisement -

அதேபோன்று இந்த கஞ்சி தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம் முழுவதும் தடவி, ஒரு 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, அதன் பிறகு முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் பெண்களின் முகம் கோடை வெப்பத்தால் வறண்டு போகாமல் தடுத்து, முக அழகை மேம்படுத்தும்.

வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்க

கோடை காலங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் பெண்களின் முகம், கழுத்து மற்றும் கைகளின் மேற்புற தோல் பகுதிகள் கருத்து போய் பொலிவிழந்து விடும். இதை தவிர்க்க ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல் மற்றும் இந்த இரண்டு பொருட்களுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு கஞ்சி தண்ணீர் ஆகிய மூன்றையும் சேர்த்து, நன்கு கலந்து பெண்கள் தங்களின் முகம், கழுத்து, கைகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு 30 நிமிடங்கள் வரை இந்த கலவை முகம், கை, கால்களில் ஊறிய பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கோடை காலத்தில் வெப்பத்தால் பெண்களின் இயல்பான நிறம் கருத்துப் போகாமல் தடுக்கப்படும்.

முக அரிப்பு நீங்க

சில பெண்களின் முகத்தில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதும், எரிச்சல் தன்மையும் இருக்கும். இத்தகைய பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்கள் சூடாக கஞ்சி தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்தில் சூடு ஆறிய பின்பு, அந்த கஞ்சி தண்ணீரை உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கட்டிகளை வைக்கும் ராக்கில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து, இந்த கஞ்சி தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியதும், இந்த கட்டிகளை எடுத்து, பெண்கள் தங்களின் முகத்தில் எரிச்சல், அரிப்பு ஏற்படும் இடங்களில் மெதுவாக தடவி விட வேண்டும். வெயிலில் சென்று வருவதால் சில பெண்களுக்கு ஏற்படுகின்ற தோல் எரிச்சல் நீங்குவதற்கும், இந்த முறையை பயன்படுத்தி பலன் பெறலாம்.

சற்று முன்