வெயிலில் சுற்றி திரிந்து உங்களுடைய சருமம் கருத்துப் போய்விட்டால் இனி கவலையே பட வேண்டாம். இதோ 10 நிமிடத்தில் சன் டேன் நீங்க்கும் ரெமிடி.

face
- Advertisement -

வெயில் காலம் வந்து விட்டாலே தானாக நம்முடைய சருமம் பொலிவை இழக்க தொடங்கி விடும். காரணம் அடிக்கிற வெயிலில், வெளியில் சென்று வருவோம். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வியர்த்து வடிந்த முகத்தில் பொலிவு குறையத்தான் செய்யும். இந்த வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க கூடிய இரண்டு அழகு குறிப்புகள் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். செலவு குறைவான அழகு குறிப்புகள். பார்லருக்கு செல்ல வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் அழகை நீங்கள் பாதுகாக்கலாம். வெயில் காலத்திலும் முகம் பொலிவோடு இருக்க ஒரு அழகு குறிப்பு, வெயிலில் சென்று வந்த உடன் சன் டான் ஆகிவிட்டால் அந்தக் கருமையை 10 நிமிடத்தில் குறைக்க ஒரு அழகு குறிப்பு என்று இரண்டு எளிமையான அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.

சன் டேன் நீங்க அழகு குறிப்பு:
ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இன்ஸ்டன்ட் காப்பித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து கலக்க பால் தேவை. எல்லா பொருட்களையும் ஒரு ஸ்பூனை வைத்து நன்றாக கலந்தால் சூப்பரான ஒரு பேக் கிடைத்திருக்கும். முகத்தை சுத்தமாக கழுவி விட்டு, முகம் கழுத்து பகுதிகளில் இந்த பேக்கை கொஞ்சம் திக்காக போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

20 நிமிடத்தில் இந்த பேக் காய்ந்தவுடன் முகத்தை ஈரம் செய்து கொண்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து முகத்தை கழுவி விட்டால் இன்ஸ்டன்ட் ஆக உங்களுடைய முகம் பொலிவு பெறும். சூரிய வெளிச்சத்தால் ஏற்பட்ட கருமை நிறம் உடனடியாக குறைந்து இருக்கும். உங்களுடைய கை, கால்களில் டேன் ஆகி இருந்தால் கூட, அந்த இடத்தில் இந்த பேக்கை போடலாம். இன்ஸ்டன்ட்டா உடனடியா நல்ல ரிசல்ட் கிடைக்கும். காய்ச்சிய பால் காய்ச்சாத பால் எது வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை தாராளமாக பயன்படுத்தலாம்.

வெயிலில் முகம் பொலிவாக இருக்க ஃபேஸ் பேக்:
இந்த வெயில் காலத்தில் சருமத்தின் மீது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். தினமும் இரவு தூங்க செல்லும் போது இந்த ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் வெயில் காலத்தில் கூட உங்களுடைய சருமம் பொலிவோடு காணப்படும். பொலிவை இழக்காது. அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் இருக்கின்ற கலரை விட கூடுதல் கலரை பெற்று தருவதற்கும் இந்த பேக் உங்களுக்கு பயன்படும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கலர் இல்லாத ஆலோவேரா ஜெல் – 3 டேபிள்ஸ்பூன், பாதாம் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/4 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் போட்டு அடித்து கலக்கினால் மஞ்சள் நிறத்தில் ஜெல் போல ஒரு கிரீம் கிடைக்கும். அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும். நமக்கு தேவையான நைட் க்ரீம் தயார். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த கிரீமை முகம் கழுத்து முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்து அப்படியே தூங்க செல்லவும். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக்கொள்ளலாம்.

தினமும் இந்த நைட் ஜெல்லை பயன்படுத்தி வாருங்கள். ஒரே வாரத்தில் உங்களுடைய முகம் எத்தனை அழகாக மாறியிருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். பார்ப்பவர்கள் எல்லாம் கேட்பார்கள். எந்த பியூட்டி பார்லரில் பேசியல் செஞ்ச. உன்னுடைய முகம் இத்தனை பளபளக்குது அப்படி என்று. இந்த வெயிலில் அழகாக இருக்க இவ்வளவு ஈசி ரெமிடியை யாரும் உங்களுக்கு சொல்ல மாட்டாங்க. இந்த இரண்டு அழகு குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -