கற்பூரம் தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இந்த கற்பூரத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என்று தெரிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.

karpuram benefits
- Advertisement -

கற்பூரம் என்றதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது பூஜை தான். ஏனென்றால் கற்பூரத்தை நாம் இது வரை தெய்வீக சார்ந்த உபயோகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஆனால் அந்த கற்பூரத்தை வைத்து என்னென்ன குறிப்புகள் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு அதில் வைத்து நிறைய விஷயங்களை நாம் செய்து கொள்ளலாம். அது என்னவென்று இப்போது இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கற்பூரத்தை பொடி செய்து போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அடுத்து ஒரு துணியை எடுத்து இந்த தண்ணீரில் முக்கி வைத்து நன்றாக ஈரப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த துணியை ஒட்டடை குச்சியில் நன்றாக இறுக்க கட்டிய பிறகு இந்த ஈரத் துணியை வைத்து வீட்டின் மூலை முடுக்கு சுவர் எல்லாம் தேய்த்து விடுங்கள். இந்த கற்பூர வாடைக்கு ஒட்டடையும் பிடிக்காது அதே நேரத்தில் பூச்சி தொந்தரவும் வராது.

- Advertisement -

ஒரு பெரிய துண்டு கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை டிஷ்யூ பேப்பரில் வைத்து ஒரு பொட்டலம் போல மடித்து பீரோவில் துணிகள் கிடையில் வைத்து விடுங்கள். துணிகளும் நல்ல வாசமாக இருக்கும் பூச்சி தொந்தரவும் இருக்காது. அதே போல் கற்பூரம் போட்டு வைக்கும் டப்பாவில் விளக்கு திரியை போட்டு வைத்து விட்டால் அதன் பிறகு நீங்கள் எப்போது தீபம் ஏற்றினாலும் இந்த திரியை பயன்படுத்துங்கள் உடனே திரி பற்றிக் கொள்ளும்.

தீபம் ஏற்றும் எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை பொடி செய்து போட்டு ஏற்றுங்கள். கற்பூரம் கலந்த இந்த எண்ணை எறியும் போது வீட்டில் வாசம் நன்றாக இருக்கும். அது மட்டும் இன்றி பூச்சி எதுவும் இந்த வாசத்திற்கு வராது. இந்த கற்பூரத்தை ஒரு பிளாஸ்டிக் கப்பல் தூள் செய்து போட்டு இத்துடன் கொஞ்சம் ஜவ்வாது பொடியையும் சேர்த்த பிறகு கொஞ்சமாக பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி கலந்து வீட்டின் சமையலறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அசைவம் சமைக்கும் நேரங்களில் இது போல செய்து விட்டால் போதும் வீட்டில் அசைவம் சமைத்த வாடையே வராது. இதையே இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாக கலந்து ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வீடு முழுவதும் அடித்து விட்டால் போதும் வீடு தெய்வீக நறுமணத்துடன் இருப்பதுடன் கொசு, பூச்சி போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் நறுமணத்துடன் சுத்தமாகவும் இருக்கும்.

பூங்கற்பூரம் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் சுத்தமான பசுமையை கலந்து குழைத்தால் நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும் இதை சாதாரணமாக தலைவலி நேரங்களில் எல்லாம் தேய்த்துப் பாருங்கள் தலைவலி உடனே பறந்து போய் விடும். இதே கற்பூரத்துடன் சிறிது அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து அதை மிதமான தீயில் காட்டி கை பொறுக்கும் சூட்டி குழந்தைங்களுக்கு தேய்த்து வந்தால் சளி தொந்தரவு இருக்காது.

- Advertisement -

அதே போல் கொஞ்சம் கற்பூரத்தை எடுத்து பவுடராக்கி ஒரு வெள்ளை நிற துணிலோ அல்லது டிஷ்யூ பேப்பர் இல்லையோ வைத்து ரப்பர் பேண்ட் போட்டு கட்டி விடுங்கள் இதை நாம் அரிசி போட்டு வைக்கும் பாத்திரத்தில் வைத்தால் அரிசி வாடை ஏதும் வராமல் பூச்சி தொந்தரவும் இல்லாமல் இருக்கும். இப்படி போட்டு வைப்பதால் அரிசியில் கற்பூரத்தின் வாடை வருமோ என்ற அச்சம் தேவையில்லை அப்படி எதுவும் வராது.

இதையும் படிக்கலாமே: வீணாக கீழே போடும் இந்த ஒரு பொருள் இருந்தா போதும் கருத்துப் போன வெள்ளி பழைய தங்க நகைகள் இரண்டையும் ஒரே நேரத்திலே பளிச்சுன்னு கிளீன் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ் இருக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம்.

இது வரைக்கும் பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த கற்பூரத்தை வைத்து நாம் எவ்வளவு வீட்டில் உபயோகமான காரியங்களை செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் உங்கள் வீட்டில் இதையெல்லாம் கடைபிடித்து பணத்தையும் நேரத்தையும் மிச்சம் படுத்தி கொள்ளலாம்.

- Advertisement -