- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வெறும் 5 நிமிடத்தில் இப்படி ஒரு ஆரோக்கியமான, ருசி தரும் போண்டாவை யாராலும் செய்ய முடியாது....

வெறும் 5 நிமிடத்தில் இப்படி ஒரு ஆரோக்கியமான, ருசி தரும் போண்டாவை யாராலும் செய்ய முடியாது. சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி!

- Advertisement -

ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யும்போது அதில் கொஞ்சம் ஆரோக்கியத்தையும் சேர்த்து செய்து கொடுங்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு எளிமையாக ஐந்தே நிமிடத்தில் இந்த ஹெல்த்தியான ஸ்நாக்ஸை செய்யலாம். இதற்கு நமக்கு சுத்தம் செய்த முருங்கைக்கீரை தேவை. முன்கூட்டியே முருங்கைக்கீரைகளை உருவி சுத்தம் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் இந்த போண்டாவை வெறும் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம். அது எப்படி என்று ரெசிபிக்குள் சென்று தெரிந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு 1 கப், சுத்தம் செய்த முருங்கைக்கீரை 2 கைப்பிடி, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2, கருவாப்பிலை 2 கொத்து, தேவையான அளவு உப்பு, சோடா உப்பு 2 சிட்டிகை, பெருங்காயத்தூள் 2 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் உங்கள் கையை வைத்து நன்றாக பிசைந்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். ஆனால் சப்பாத்தி மாவு போல ரொம்பவும் திக்காக பிசைந்து விடாதீர்கள். கொஞ்சம் சாஃப்ட்டாக மாவை பிசைந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த மாவை எடுத்து கையில் உருண்டைகளாக தயார் செய்ய வேண்டும்.)

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இந்த போட்டோவை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், போண்டா மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் இந்த போண்டாவை எல்லாம் எண்ணெயில் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து போண்டாவை மெதுவாக சிவக்க விட்டு எடுங்கள். அப்போதுதான் உள்ளே வரை வேகும்.

- Advertisement -

இந்த போண்டா மேலே மொறுமொறுப்பாக உள்ளே, சாப்டாக சூப்பராக கிடைக்கும். முருங்கைக்கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி போண்டா சுட்டுக்கொடுங்கள். அவர்கள் அதை விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த போண்டாவில் பச்சை மிளகாய்க்கு பதிலாக கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்தும் செய்யலாம். இதோடு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, சேர்த்து சுட்டால் போண்டா இன்னும் கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் கிடைக்கும். அதன் ருசியும் சூப்பராக தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு செய்வது எப்படி?

அவ்வளவு தாங்க. போண்டாவே இனிமே கடையில் போய் வாங்கி சாப்பிடாதீங்க. ரெசிபி பிடிச்சிருந்தா இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. ஆரோக்கியமும் சுவையும் சேர்ந்து கிடைக்கும்.

சற்று முன்