- Advertisement -
Homeஆன்மீக குறிப்புகள்கீழப்பெரும்பள்ளம் கேது கோவில்

கீழப்பெரும்பள்ளம் கேது கோவில்

- Advertisement -

ராகு – கேது ஆகிய இரு கிரகங்களில் ஒரு மனிதனுக்கு ஞானத்தையும், அதிகளவு தங்க சேர்க்கையையும் அளிக்கக்கூடிய கிரகமாக கேது பகவான் திகழ்கிறார். இந்த கேது பகவான் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருந்தால் அவருக்கு கேது கிரக தோஷம் ஏற்படுகிறது. அந்த வகையில் கேது கிரக தோஷம் ஏற்பட்டவர்கள், தங்களின் தோஷங்கள் நீங்கி வாழ்வில் மேன்மையான பலன்களை பெற செய்யக்கூடிய ஒரு பரிகாரமாக கீழ்ப்பெரும்பள்ளம் கோயில் (Keelaperumpallam kethu temple in Tamil) பரிகாரம் திகழ்கிறது. இந்த பரிகாரம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கேது தோஷம் என்றால் என்ன

ஒரு நபரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் எனப்படும் 1 ஆம் வீட்டில் கேது கிரகம் இருந்தாலோ அல்லது அந்த லக்னத்திற்கு 2, 5, 7, 8 ஆகிய வீடுகளில் கேது கிரகம் இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கேது கிரக தோஷம் இருப்பதாக பொருள். இதை சர்ப்ப தோஷம் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

ஜாதகத்தில் இந்த கேது கிரக தோஷம் பெற்றவர்கள் வாழ்வில் பலவிதமான இன்னல்களை எதிர்கொள்வார்கள். குடும்ப வாழ்வில் திருப்தி என்பது இருக்காது. உடலில் அடிக்கடி காயங்கள் ஏற்படும். சிலர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைப்பார்கள். எந்த ஒரு விடயத்திலும் பற்று இல்லாமல் ஒரு சந்நியாசியை போல் வாழ்வார்கள். சிலர் உற்றார், உறவினர்களை துறந்து துறவிகளாகவே மாறிவிடக்கூடிய நிலையும் ஏற்படும்.

கீழ்ப்பெரும்பள்ளம் கோயில்

ஜாதகத்தில் கேதுவின் பாதகமான அமைப்பால் மேற்சொன்ன பாதிப்புகள் ஏற்படாமலிருக்க, கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் கொண்டவர்கள் தங்களின் தோஷம் நீங்க செல்ல வேண்டிய பரிகாரத் தலமாக கீழ்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் கோயில் திகழ்கிறது. தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்ற நவகிரக கோயில்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.

- Advertisement -

தமிழ் நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது கீழ்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் தெய்வமான சிவபெருமான் நாகநாதர் என்கிற பெயரிலும், அம்பாள் ஸ்ரீ சௌந்தரநாயகி என்கிற பெயரிலும் அருள்பாளிக்கின்றனர். திருக்கோயிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் ராகு காலம் மற்றும் எமகண்ட வேளைகளில் கேது பகவானுக்கு அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.

கீழ்ப்பெரும்பள்ளம் கோயில் பரிகாரம்

கீழ்ப்பெரும்பள்ளம் கோயில் பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் பரிகாரம் செய்வதற்கு ஒரு தினத்திற்கு முன்பாகவே கீழ்ப்பெரும்பள்ளம் சென்று அங்கு இரவு தங்க வேண்டும். பரிகாரம் செய்கின்ற தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, கோயில் குளத்தில் நீராடி, பிறகு புத்தாடை அணிந்து கோயிலின் தெய்வங்களான நாகநாதர், ஸ்ரீ சௌந்தரனாகிய அம்பாளை வழிபாடு செய்த பிறகு கோயிலை சுற்றி 7 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

பிறகு கேது பகவான் இருக்கின்ற சன்னதிக்கு சென்று முறைப்படி அபிஷேக கட்டணம் செலுத்தினால் கோயிலில் இருக்கும் அர்ச்சகர்களாலேயே கேது பகவானுக்கு, தங்களின் கேது தோஷம் தீருவதற்கான அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து கொடுக்கப்படும். பிறகு இந்த கேது பகவான் சன்னதிக்கு எதிரே அரசு மற்றும் வேப்பமரங்கள் இணைந்திருக்கின்ற மேடையில் உங்களால் இயலும் பட்சத்தில் நாக பிரதிஷ்டை செய்து வழிபடுவது நல்லது.

கேது பகவான் அபிஷேகம் மற்றும் பரிகாரம் முடிந்த பிறகு, பரிகாரம் செய்து கொண்டவர்களுக்கு கோயில் சார்பாக குங்குமம், விபூதி ஆகியவற்றுடன் ஒரு பொட்டலம் உலர் பொடி கொடுக்கப்படும். கோயிலில் கேது பகவானுக்குரிய பரிகாரம் செய்து கொண்டவர்கள், 7 நாட்களுக்கு அசைவ உணவு, ஆண் – பெண் இணைவு ஆகியவற்றை தவிர்த்து தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் குலதெய்வத்தை வழிபாடு செய்து கோயிலில் தரப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: திருநாகேஸ்வரம் பரிகாரம்

பிறகு கோயிலில் தரப்பட்ட உலர் பொடியை 7 நாட்களுக்கு தொடர்ந்து உங்கள் உணவில் கலந்து உட்கொள்ள வேண்டும். ஏழாம் நாள் முடிவில் உங்கள் வீட்டிற்கருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கோ அது விநாயகர் சன்னதிக்கோ சென்று விநாயகர் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி, தேங்காயில் கற்பூரம் வைத்து கொளுத்தி பின்பு அந்த தேங்காயை விநாயகருக்கு சிதறு தேங்காயாக உடைத்து முடித்ததும், இந்த பரிகாரம் (Keelaperumpallam kethu temple in Tamil) நிறைவடைகிறது. அத்தோடு கேது தோஷமும் அந்த நபர்களுக்கு நீங்குகிறது என்பது ஐதீகம்.

சற்று முன்