திருநாகேஸ்வரம் பரிகாரம் | Thirunageswaram pariharam in Tamil

Thirunageswaram pariharam in tamil
- Advertisement -

திருநாகேஸ்வரம் கோவில் பரிகாரம்

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவானுக்கு நிகரான வலிமை கொண்ட கிரகங்களாக ராகு – கேது கிரகங்கள் கருதப்படுகின்றன. ராகு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் யாருமே எட்ட முடியாத பல சாதனைகளை செய்யக்கூடிய நிலையில் இருப்பார். அதே நேரம் ஒருவரின் ஜாதகத்தில் ராகு கிரகம் பாதகமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகருக்கு ராகு தோஷம் ஏற்பட்டு வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்க நேர்கிறது. இத்தகைய ராகு தோஷம் நீங்க செய்யப்படுகின்ற திருநாகேஸ்வரம் கோயில் பரிகாரம் (Thirunageswaram pariharam in Tamil) குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு தோஷம் என்றால் என்ன

ஒருவரின் ஜாதகத்தில் ராகு – கேது ஆகிய இரண்டு கிரகங்கள் சில குறிப்பிட்ட இடங்களில் அமைவதால் அந்த ஜாதகருக்கு இந்த இரு கிரகங்களினால் தோஷங்கள் ஏற்படுகிறது. இதில் ராகு தோஷம் என்பது ராகு ஒரு நபரின் ஜாதகத்தில் அவர் பிறந்த லக்னம் 2,5,7,8 ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு ராகு தோஷம் இருப்பதாக பொருள். இதை சர்ப்பதோஷம் எனவும் கூறுவார்கள்.

- Advertisement -

ராகு தோஷம் ஏற்பட்டால் என்ன பலன்

ஜாதகத்தில் ஏற்படுகின்ற இத்தகைய ராகு தோஷத்தால் அந்த ஜாதகருக்கு சரி வர கல்வி கற்க இயலாமல் போகும். பிறரை கீழ்த்தரமாக பேசுவது, கெட்ட வார்த்தைகளால் அதிகம் திட்டுவது, போதைப் பொருட்கள் உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகளை ராகு தோஷம் கொண்டவர்களிடம் இருக்கும்.

மேலும் எந்த ஒரு வேலையிலும் நிலையாக இருக்க முடியாத குணம், சமூக விரோதிகளுடன் பழக்கம், திருமண வாழ்க்கை அமையாத சூழல், திருமணமானாலும் குழந்தை பேறு இல்லாமல் போவது வாழ்க்கைத் துணையுடன் ஓயாத சண்டை சச்சரவுகள் போன்றவை ஒரு ஜாதகத்தில் மேற்சொன்ன வீடுகளில் ராகு கிரகம் இருந்தால் ஏற்படும் பலன்களாகும்.

- Advertisement -

ராகு பரிகார ஸ்தலம்

ஜாதகத்தில் ஏற்படுகின்ற ராகு தோஷம் தீர மிகச்சிறந்த ஆன்மீக பரிகாரமாக இருப்பது திருநாகேஸ்வரம் ராகு பரிகாரமாகும். ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் இருக்கின்ற திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று முறைப்படி ராகு பரிகாரம் செய்ய வேண்டும்.

திருநாகேஸ்வரம் ராகு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் பரிகாரம் செய்யும் தினத்திற்கு முன் தினமே திருநாகேஸ்வரம் சென்று அங்கு இரவு தங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் திருக்குளத்திற்கு சென்று தலை முழுகி குளித்து ஈர ஆடைகளை களைந்து, தூய்மையான பாரம்பரிய வஸ்திரங்களை அணிந்து கொண்டு, கோயிலில் இருக்கின்ற நாகநாத சுவாமி மற்றும் கிரிகுஜாம்பிகை அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

திருநாகேஸ்வரம் பால் அபிஷேகம் நேரம்

திருக்கோயிலில் ராகு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பக்தர்களின் துயர்களை போக்க ராகு பகவான் மனித உருவில் அருள் பாலிக்கிறார். இந்த திருநாகேஸ்வரம் ராகு பகவானுக்கு ஒவ்வொரு தினமும் காலை 9.30 முற்பகல் 11.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஜாதகத்தில் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களின் தோஷம் தீர இங்கிருக்கின்ற ராகு பகவானுக்கு காலை 9.30 அல்லது முற்பகல் 11.30 ஆகிய காலங்களில் செய்யப்படுகின்ற பாலாபிஷேக பூஜையின் பொழுது தங்கள் தோஷம் நீங்குவதற்கும் பாலபிஷேகம் செய்ய வேண்டும். இராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது தங்களின் மனதிற்குள்ளாகவே ராகு பகவானை நினைத்து, தங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் நற்பலன்களை ராகு பகவான் அருள வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விநாயகர் பரிகாரம்

பிறகு கோயிலுக்குள்ளாக மற்றொரு சன்னதியில் இருக்கின்ற உற்சவர் ராகு பகவானுக்கு மலர் மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு கோயிலை 9 எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். மேற்சொன்ன முறையில் திருநாகேஸ்வரம் பரிகாரம் (Thirunageswaram pariharam in Tamil) செய்பவர்களுக்கு ராகு பகவானின் முழுமையான அருள் கிடைத்து அவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -