- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஅழகு குறிப்புனாலே அது பெண்களுக்கு தானா எங்களுக்கு எதுவும் இல்லையா என்று வருத்தப்படும் ஆண்கள் இந்த...

அழகு குறிப்புனாலே அது பெண்களுக்கு தானா எங்களுக்கு எதுவும் இல்லையா என்று வருத்தப்படும் ஆண்கள் இந்த எளிமையான இரண்டு டிப்ஸை ட்ரை பண்ணுங்க. கருப்பா கலை இழந்து இருக்கும் முகம் கூட நல்லா கலர மாறிடும்.

- Advertisement -

பொதுவாகவே அழகு தொடர்பான குறிப்புகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் பெண்களுக்கான முக்கியத்துவமே அதிகமாக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் எப்படி ஆணும் பெண்ணும் சமம். இருவரும் எல்லாவற்றிலும் பொதுவானவர்கள் என்ற கருத்து நிலவுகிறதோ, அதே போல அழகு விஷயத்திலும் ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் பொலிவாக காட்டிக் கொள்ளவும் விருப்பப்படுகிறார்கள்.

இப்படி தங்களை நல்ல நிறத்துடனும், அழகாகவும் காட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் ஆண்கள் இந்த பதிவில் இருக்கும் இரண்டு எளிமையான அழகு குறிப்புகளை தெரிந்து கொண்டால் போதும். எப்போதும் அவர்கள் ஆசைப்பட்டது போல அழகான தோற்றத்தை பெறலாம். வாங்க இப்போது அந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ஆண்களின் கருப்பான முகத்தை கலராக மாற்ற
இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் இரண்டையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி காட்டன் துணி வைத்து முகத்தை துடைத்து விடுங்கள்.

இப்போது இந்த பேக்கை உங்கள் முகத்தில் தேய்த்த பிறகு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மீண்டும் சுத்தமான தண்ணீர் வைத்து முகத்தை அலம்பி விட்டால் போதும். உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி முகத்தில் இருக்கும் கருத்திட்டுக்கள் மாறி முகம் பொலிவாக மாற ஆரம்பிக்கும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் நிறம் மாறுவதை நீங்களே உணர முடியும்.

- Advertisement -

இதே பேக்கையே வேறு விதமாகவும் தயார் செய்யலாம். இந்த முறையும் நல்ல பலனையே தரும். இதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர், ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு இவை மூன்றையும் குழைத்து பேஸ்ட் போல செய்த பின், முன்பு சொன்னதை போல முகத்தை சுத்தம் செய்து இந்த பேக்கை போட்டு 15 நிமிடம் கழித்து மறுபடியும் சுத்தம் செய்து விடுங்கள்.

இந்த குறிப்பையும் வாரம் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி முகம் நல்ல பொலிவாக மாற ஆரம்பிக்கும். இந்த இரண்டு எளிமையான குறிப்புகளையும் தெரிந்து கொண்டு வீட்டில் நீங்களே இது போல செய்து கொள்ளும் போது முகம் நல்ல பொலிவாக மாறும்.

இதையும் படிக்கலாமே: முகம் வெள்ளையாகவும் அழகாகவும் மாற இனி எதையும் தேடி ஓட வேண்டாம். சமையலறையில் இருக்கும் இந்த பொருளை பயன்படுத்தினாலே போதும் பேரழகியாய் வலம் வரலாம்.

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமானதாக இருக்கும். அது மட்டும் இன்றி பெண்களை விட ஆண்கள் வெளியில் அதிகம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அது போன்ற சமயத்தில் வீட்டிற்கு வந்தவுடன் இந்த பேக்கை முகத்திற்கு போடும் போது வெயிலினால் ஏற்படும் கருத்திட்டு கூட உடனே மறைந்து விடும். இந்த இரண்டு எளிய குறிப்பில் உங்களுக்கு விருப்பமானதை செய்து பலன் பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்யலாம்.

சற்று முன்