முகம் வெள்ளையாகவும் அழகாகவும் மாற இனி எதையும் தேடி ஓட வேண்டாம். சமையலறையில் இருக்கும் இந்த பொருளை பயன்படுத்தினாலே போதும் பேரழகியாய் வலம் வரலாம்.

face cream kukumber
- Advertisement -

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாருமே கிடையாது. இதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் வித்தியாசம் இல்லாமல் தங்களை அழகுப்படுத்தி கொள்ள நினைப்பார்கள். ஆனால் அப்படி அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடைகளில் கிடைக்கும் தேவையற்ற கெமிக்கல் கலந்த கிரீமை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நிமிடத்தில் நம்மை அழகாக மாற்றிக் கொள்ளலாம். இந்த அழகு குறிப்பு என்ன என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்
முகத்தை வெள்ளையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். முதலில் முகத்தை சரியான முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும். முகத்திற்கு அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்வது கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகள் தண்ணீர் போன்றவற்றை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பேஸ்பேக்கை தயாரித்து விடலாம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில் கான்பிளவர் பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் காபி பவுடர் இரண்டு ஸ்பூன், காய்ச்சாத பச்சை பால் நான்கு டேபிள் ஸ்பூன், வெள்ளரி சாறு 2 ஸ்பூன். இப்போது அடுப்பில் பேன் வைத்து லேசாக சூடு ஆனவுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் கான்பிளவர் பவுடர், காபி பவுடர், பால் மூன்றையும் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கை விடாமல் கலந்தால் நல்ல ஒரு கிரீம் பதத்திற்கு கிடைத்து விடும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு பவுலுக்கு மாற்றி நன்றாக ஆற விடுங்கள். அதன் பிறகு ஆறிய இந்த ஃபேஸ் பேக்வுடன் வெள்ளரி சாறை கலந்து குழைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பச்சைப் பால் கொஞ்சம் பஞ்சை நனைத்து முகம் முழுவதும் தேய்த்து இரண்டு நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்து பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்த பிறகு 15 நிமிடம் வரை அதை அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் முகத்தில் நன்றாக ஊறிய பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணியில் தண்ணீரை முக்கி எடுத்து முகம் முழுவதும் துடைத்து விடுங்கள். இப்போது உடனே எந்த வித கெமிக்கல் கலந்த சோப்பு ஃபேஸ் வாஷ் எதையும் பயன்படுத்தக் கூடாது. இந்த இந்த ஃபேஸ் பேக்கை முடிந்த வரை இரவு உறங்க செல்வதற்கு முன்பு போடுவது மிகவும் நல்லது.

இந்து ஃபேஸ் பேக்கை வாரம் இரு முறை மட்டும் பயன்படுத்தி வந்தாலே போதும். உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகம் பளிச்சென்று வெண்மையாகி அழகு தேவதையாக ஜொலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: உங்க முழு உடம்பும் தங்கம் போல ஜொலி ஜொலிக்க இந்த ஒரு எண்ணெய் இருந்தா போதும். வாழ்நாள் முழுவதும் அழகு தேவதையாக வலம் வர செலவே இல்லாத அருமையான அழகு குறிப்பு.

முகம் வெள்ளையாக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையில் ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தி வரும் போது எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத பேரழகை பெறலாம். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -