ஒருவருடைய வாழ்க்கையில் நிம்மதி என்பது மிகப்பெரிய முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அந்த நிம்மதி எந்த வகையில் கிடைக்கும் என்பதே பல பேரின் தேடுதலாக விளங்குகிறது. நோயாளிக்கு உடல் ஆரோக்கியம் நிம்மதியை தரும். வறுமையில் இருப்பவர்களுக்கு பணம் நிம்மதியை தரும். குழந்தைகளுக்கு விளையாட்டு நிம்மதியை தரும். இதே போல் கடன் பெற்றவர்களுக்கு கடனை அடைப்பது தான் நிம்மதியை தரும். இந்த ஆன்மீகம் குறித்த பதில் கடனை அடைத்து நிம்மதி பெறுவதற்கு வீட்டு பூஜை அறையில் உப்பை எப்படி வைக்க வேண்டும் என்று தான் நாம் பார்க்கப் போகிறோம்.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிலர் கடன் வாங்குவார்கள். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதற்காக சிலர் கடன் வாங்குவார்கள். தொழிலை முன்னேற்றுவதற்காக சிலர் கடன் வாங்குவார்கள். இன்னும் சிலரோ வாங்கிய கடனை அடைப்பதற்காக கடன் வாங்குவார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் கடனை வாங்கி அதற்கு வட்டி கட்டி அந்த அசலை திரும்ப தர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பலர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கடனை அடைப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றாலும், மீண்டும் கடனை வாங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும் என்பதே உண்மை. இதை செய்து கொண்டே நாம் சொல்லப்போகும் பரிகாரத்தை செய்தால் கண்டிப்பான முறையில் அவர்களிடம் இருக்கக்கூடிய கடன் அனைத்தும் அடையும்.
மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கக்கூடிய உப்பை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் மேற்கொள்ள போகிறோம். பொதுவாக உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த உப்பை நாம் எப்பொழுதும் வீணாக்காமல் கீழே சிதறவிடாமல் உபயோகப்படுத்த வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் உப்பை வீட்டிற்கு வாங்கி வரும் பொழுது மகாலட்சுமியே வீட்டிற்குள் வருவாள் என்று கூறப்படுகிறது.
வீட்டில் இருக்கக்கூடிய ஒரு சிறிய அளவிலான கண்ணாடி கிண்ணமோ அல்லது பீங்கான் கிண்ணத்தையோ எடுத்துக் கொள்ள வேண்டும். புதிதாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வாங்க வேண்டும். மிகவும் சிறிய அளவில் பாக்கெட் கண்ணாடியாக இருந்தால் கூட போதும். கண்டிப்பாக முறையில் அது புதியதாக இருக்க வேண்டும். இந்த முகம் பார்க்கும் கண்ணாடி எப்பொழுதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். வீட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமையில் வாங்கி வந்த உப்பை கண்ணாடி பாத்திரத்தில் கோபுரமாக குவித்து வைக்க வேண்டும். இந்த உப்பு குவியல் கண்ணாடியில் தெரியும் படி பூஜை அறையில் வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் அந்த உப்பை நம் சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மறுபடியும் அடுத்த வார வெள்ளிக்கிழமை இதே போல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். புதிதாக கடன் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலையை ஏற்படாது.
இதையும் படிக்கலாமே: பூஜையில் இந்த 3 பொருட்களை வைக்காமல் பூஜை செய்தால் பலன் குறையுமாம் தெரியுமா? இதெல்லாம் வைத்து தான் பூஜை செய்கிறோமா?
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாம் வாராவாரம் மேற்கொண்டு நம் வீட்டில் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற்று கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளியில் வருவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.