நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரை நாம் பல செயல்களை செய்கின்றோம். அந்த செயல்களில் நமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஒரு செயலில் வெற்றி பெற்றால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அந்த வகையில் நாம் செய்யும் தொழிலில் நமக்கு வெற்றி கிடைத்தால் நம் வாழ்க்கையே மகிழ்ச்சியாக அமையும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் செய்யும் தொழிலில் வெற்றி பெற எந்த தீபத்தை ஏற்ற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
ஒரு சிறிய பெட்டிக்கடையாக இருந்தாலும் பெரிய தொழில் ஸ்தாபனமாக இருந்தாலும் அதில் பல பிரச்சினைகள் ஏற்படும். அந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து அந்த தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரே முயற்சியோடு பல வகையான செயல் திட்டங்களை மேற்கொள்வார்கள்.
என்ன தான் திட்டங்களை போட்டாலும் அதோடு சேர்ந்து கடவுளின் அருளும் நமக்கு வேண்டும். அந்த வகையில் நாம் செய்யும் தொழிலை வளப்படுத்த உதவக்கூடிய தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். சிவபெருமானை முறையாக நாம் வழிபட்டால் நாம் செய்யும் தொழிலில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, நமக்கு லாபகரமான தொழில் அமையும் என்று கூறப்படுகிறது.
இதற்காக நாம் சிவபெருமானை நினைத்து தினமும் ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும். அந்த தீபத்தால் நம் தொழிலில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு மட்டும் அல்லாமல் மகாலஷ்மிக்கும் உகந்த மரமாக கருதப்படுவது தான் வில்வமரம்.
இந்த வில்வ மரத்தில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களும் சிவபெருமானுக்கு உரிய பொருட்களாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் வில்வ பழத்தை பயன்படுத்தி நம் தொழிலில் வெற்றிகள் பெறுவது எப்படி என்று பார்ப்போம். நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு தெய்வத்தின் புகைப்படம் இருக்கும்.
எந்த தெய்வமாக இருந்தாலும் பரவாயில்லை, அந்த தெய்வத்தின் முன்பாக ஒரு வில்வ பழத்தையோ அல்லது காயையோ வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை நாம் எந்த விளக்கு வைத்து வேண்டுமானாலும் ஏற்றலாம். அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாதாரண திரியை போட்டு ஏற்றினால் கூட போதும்.
இந்த வில்வ காயோ அல்லது பழமோ நமக்கு கிடைக்காத பட்சத்தில் வில்வ இலைகளை வைத்து அதன் மேலும் தீபம் ஏற்றலாம். முடிந்தவரை வில்வ காய் அல்லது பழத்தின் மேல் தீபம் ஏற்ற முயற்சி செய்யுங்கள். வில்வ காயும் விளக்கும் கீழே விழுகாத அளவிற்கு வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த பழம் அவ்வளவு சீக்கிரமாக கெட்டுப் போகாது. அவை காய்ந்து அப்படியே தான் இருக்கும். ஆதலால் அதை மாற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சில நேரங்களில் காயில் விரிசல் ஏதேனும் ஏற்பட்டால் மட்டுமே புதிதாக நாம் வில்வ காயை வாங்கி வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: இந்த பையில் நீங்கள் ஒரு ரூபாய் பணத்தை வைத்தாலும் கூட அது பல லட்சங்களாக மாறும் அதிசயம் நடக்கும். பணம் நகை என எதை வைத்தாலும் அதை பல மடங்காக பெருக்கி தரும்.
இவ்வாறு நாம் வில்வ காயின் மேல் தீபம் ஏற்றுவதால் சிவபெருமானின் அருள் கிடைத்து தொழிலில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், சங்கடங்களும் விலகும். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைப்பதால் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும்.