- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டின் சமையல் அறையில் இந்த ஒரு பொருள் மட்டும் எப்போதும் நிறைவாக இருந்தால், வீட்டில் பணம்...

வீட்டின் சமையல் அறையில் இந்த ஒரு பொருள் மட்டும் எப்போதும் நிறைவாக இருந்தால், வீட்டில் பணம் இல்லை என்ற வார்த்தை சொல்வதற்கான வாய்ப்பே ஏற்படாது.

- Advertisement -

நம் வீட்டு பெரியவர்கள் வாழ்க்கை முறையை பார்த்தால் சில விஷயங்கள் நமக்கு தெளிவாக புரியும். அவர்கள் எப்பொழுதும் சமையல் அறையில் சில பொருட்களை நிறைவாகவே வைத்திருப்பார்கள். அதை குறையவே விடமாட்டார்கள். அது மட்டும் இன்றி காலம் அறிந்து சமையல் செய்வது சமையல் செய்யும் போது உள்ள நுணுக்கங்கள் என நிறைய விஷயங்களை கடைப்பிடித்து இருப்பார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அவசரமான இந்த சூழ்நிலையில் பல விஷயங்களை நாம் கடந்தும், மறந்தும் விட்டோம் என்பதே உண்மை.

இப்படி அவர்கள் பின்பற்றிய பழக்கத்தில் முக்கியமான ஒன்று சமையலறையில் இருக்கும் அஞ்சரை பெட்டி. இந்த அஞ்சறைப் பெட்டியில் எந்த பொருட்களும் குறைவாக இருக்கக் கூடாது. அது தீர தீர நாம் வாங்கி போட்டு அது நிறைவாக இருக்க வேண்டும்.அந்த பெட்டியில் உள்ள பொருட்கள் நிறைவாக இருந்தாலே குடும்பம் சுபிட்சமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு வீட்டில் அஞ்சரை பெட்டியை பார்த்தாலே அந்த வீட்டில் உள்ள சூழ்நிலையில் புரிந்து விடும் என்ற ஒரு வழக்கமும் நம்மில் இருந்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த அஞ்சறைப் பெட்டி இன்றைய காலகட்டத்தில் பலரும் பிளாஸ்டிக்கில் பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்தவே கூடாது என்று நம் சாத்திரம் சொல்கிறது. அஞ்சறைப் பெட்டியை பொருத்தவரையில் முடிந்த அளவு சில்வரின் பயன்படுத்த வேண்டும் இல்லை எனில் இப்பொழுது பித்தளை, மரத்தில் எல்லாம் வருகிறது அப்படி ஏதேனும் ஒன்றை வாங்கி பயன் படுத்த வேண்டும்.

அது மட்டும் இன்றி இந்த அஞ்சறைப் பெட்டி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் எண்ணெய் பிசுக்கு அழுத்த எல்லாம் படிந்து பார்க்கவே அசிங்கமாக அருவருப்பாக இருக்கக் கூடாது. அதுமட்டுமின்றி அஞ்சறைப் பெட்டியில் தேவையில்லாத பொருட்களான பின், இரும்பிலான பொருள் மாத்திரை போன்றவற்றையெல்லாம் வைக்கக் கூடாது.

- Advertisement -

அப்படி நிறைவாக வைத்து இருக்கக் கூடிய அஞ்சறைப் பெட்டியில் இந்த ஒரு பொருள் எப்பொழுதும் நிறைவாக இருக்க வேண்டும். அது பெருஞ்சீரகம் என்ன சொல்லப்படும் சோம்பு. இந்த சோம்பிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை மிகவும் அதிகம் ஆகையால் தான் எந்த பொருள் அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டும் அதுவும் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். அப்படி வைக்கும் அந்த சோம்பின் அடியில் ஒரு ஐந்து ரூபாய் தாளை வைத்து விடுங்கள் நாணயத்தை வைக்க வேண்டாம். ஏனெனில் ஐந்து என்பது குபேரரின் எண். சமையலறையில் இருக்கும் சோம்பு பணத்தை எடுப்பது என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சத்தை குறிக்கும். அத்துடன் குபேரருடைய ஐந்தும் சேரும் போது பணவரம்பு பல மடங்கு பெருகும் வீட்டில் இல்லை என்ற வார்த்தைக்கு வழிவகுக்காது.

இப்படி அஞ்சறைப் பெட்டியில் சோம்பையும் பணத்தையும் மட்டும் வைத்து விட்டால் பணம் சேர்ந்து விடுமா? என்ற நிச்சயம் சேராது. ஒரு வீட்டில் ஒரு ரூபாய் வருமானம் வந்தாலும் அதில் வீண் செலவுகள் இல்லாது சிக்கனமாக செலவு செய்து அந்த பணம் கையில் தாங்கும் போது அது தான் சேமிப்பாக மாறும். அது தான் நம்முடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். அப்படி வருமானம் நல்ல முறையில் வந்து நல்ல வழியில் செலவழிந்து வீண் செலவுகள் இல்லாமல் இருப்பது வீட்டில் பணம் எப்போதும் தங்கும் என்பதற்கு பொருள் தானே.

இதையும் படிக்கலாமே: 24 மணி நேரத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். விதியால் நடக்கக்கூடாது என்று எழுதி இருந்தாலும், அது நிச்சயம் மாற்றப்படும். இதை மட்டும் உங்களுடைய கையில் எழுதினால்.

இந்த பதிவில் உள்ள தகவல்கள் அனைவரும் பின்பற்றக் கூடிய மிக மிக சாதாரணமான ஒரு விஷயம் தான். இந்த ஒரு சின்ன மாற்றத்தை நாம் சமையலறையில் செய்து தொடர்ந்து கடைபிடிக்கும் போது நம் வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பணம் எப்போதும் கையில் தங்கும் என்றால் இதை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை தானே. நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள்.

சற்று முன்