- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரே இரவில் கொரியன் பெண்களை போல பளபளக்கும் கண்ணாடி போன்ற முக அழகைப் பெற இரவு...

ஒரே இரவில் கொரியன் பெண்களை போல பளபளக்கும் கண்ணாடி போன்ற முக அழகைப் பெற இரவு தூங்கும் முன் இந்த பேக் உங்க முகத்துல போட்டா போதும். அப்புறம் பாருங்க அழகுல உங்களை அடிச்சுக்க ஆளே இருக்காது.

- Advertisement -

முடி வளர்ச்சி என எடுத்துக் கொண்டால் நாம் பயன்படுத்தும் அனைத்து ரெமிடியும் கேரள பெண்கள் பயன்படுத்தும் ரெமடிகளாக தான் அதிகமாக தேடி உபயோகிப்போம். இதற்கு காரணம் அவர்களுடைய முடி வளர்ச்சி அப்படி இருக்கும். அதேஸபோல முகம் நல்ல பளபளப்பான கண்ணாடி போன்ற சருமம் வேண்டுமெனில் இந்த ஜாப்பனீஸ் கொரியன் போன்றவர்களுடைய முக அழகிய தான் உதாரணமாக சொல்லுவோம். அப்படியான ஒரு முக அழகை நாமும் பெற ஒரு எளிமையான ஃபேஸ் பேக்கை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று தான் இந்த அழகு குறிப்பு பதிவு தெரிந்து கொள்ள போகிறோம்.

கேரள பெண்களின் முடி அழகாக இருக்கட்டும் அல்லது எது கொரியன் ஜப்பனீஸ் பெண்களின் முக அழகாக இருக்கட்டும், இது போல அவர்களுக்கு இயற்கையாகவே அமைவது அவர்களுடைய தட்பவெட்ப நிலை அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கம் போன்றவை எல்லாம் காரணமாக இருந்தாலும் அவர்கள் பயன்படுத்தும் ஒரு சில அழகு குறிப்பும் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு குறிப்பு தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கண்ணாடி போன்ற பளபளக்கும் சருமத்தை பெற பீட்ரூட் பேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நமக்கு தேவையான முக்கியமான பொருள் பீட்ரூட் பவுடர். இது இப்போது அனைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது அல்லது நீங்கள் வீட்டிலேயே பீட்ரூட்டை துருவி நிழலில் ஆற வைத்து அதை பவுடர் செய்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சிறிய பவுலில் பீட்ரூட் பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் நல்ல தரமான ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளுங்கள். மேலும் இத்துடன் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் உங்களிடம் எந்த எண்ணெய் இருக்கிறதோ அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாக இருந்தாலும் நல்ல சுத்தமான செக்கில் ஆட்டிய எண்ணெயாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு கால் டீஸ்பூன் மட்டும் கிளிசரின் பயன்படுத்துங்கள். இதன் அளவு அதிகரித்து விடக்கூடாது கவனமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு நன்றாக குழைத்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பு உங்கள் முகத்தை சுத்தமாக துடைத்து பின் ஈரம் இல்லாமல் இருக்கும் போது இந்த பேக்கை உங்கள் முகத்தில் போட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை துடைத்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் முகம் கண்ணாடி போல நல்ல பளிச்சுன்னு ஷைனிங்கா இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கோல்டன் பேஷியல் பண்ணிங்களான்னு பாக்குறவங்க எல்லாரும் கேட்கிற அளவுக்கு முகம் தங்கம் போல பிரகாசமா திகழ இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும். தகதகன்னு ஜொலிக்க ஆரம்பிப்பீங்க.

ஒரு முறை தயாரிக்கும் இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்தி சிறிது நேரத்திற்கு முன்பு எடுத்து வைத்து விட்டு அதன் பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் முகத்தின் அழகை கண்டு நீங்களே பொறாமைப்படும் அளவிற்கு மாறி விடுவீர்கள். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்