- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇந்த ஐஸ் கட்டியை உங்க முகத்தில் தடவி பாருங்க. உங்க முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் ஏதும்...

இந்த ஐஸ் கட்டியை உங்க முகத்தில் தடவி பாருங்க. உங்க முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் ஏதும் இல்லாம ரொம்ப கிளீனா இருக்கும்.

- Advertisement -

டீன் ஏஜ் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்வது முகப்பருக்கள் தான். ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய இந்த முகப்பருக்களை முறையாக பராமரித்தால் அது விரைவிலேயே சரியாகிவிடும். ஆனால் அதை முறையற்ற வகையில் நகங்களை வைத்து கிள்ளுவது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது அது வடுக்களாக மாறி என்றுமே முகத்தில் இருந்து நீங்காமல் இடம் பிடித்துக் கொள்ளும். பிற்காலத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவினால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள் அனைத்தும் போகும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

இளம் வயதில் இருக்கும் அனைவரும் சந்திக்கும் முக்கியமான ஒன்றுதான் முகப்பரு. பெரும்பாலும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஆண் பெண் குழந்தைகள் இந்த பிரச்சனையில் பாதிக்கப்படுவார்கள். பருக்கள் வரக்கூடாது என்பதற்காகவும், வந்த பருக்கள் போக வேண்டும் என்பதற்காகவும் பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவற்றில் மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒருமுறை இதை தயார் செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதங்கள் வரை இதை பயன்படுத்தலாம். இதற்கு நாம் முதலில் கிரீன் டீ தயார் செய்ய வேண்டும். ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை நன்றாக சூடாக்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கிரீன் டீ தூளை போட்டு மூடி வைத்து விட வேண்டும். கிரீன் டீ தூளில் இருக்கும் சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கிய பிறகு அதை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை கப் அளவிற்கு வெள்ளரிக்காயை நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் பாதி எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து விட வேண்டும். நாம் ஏற்கனவே வடிகட்டி வைத்திருக்கும் கிரீன் டீயை அதில் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது பிரிட்ஜில் இருக்கும் ஐஸ் ட்ரேயை எடுத்து ஐஸ் கியூப் ஊற்றி வைக்கும் ஒவ்வொன்றிலும் இரண்டு புதினா இலைகளை வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய் சாற்றை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து பிரீசரில் இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து உபயோகிக்கலாம்.

இந்த ஐஸ் கட்டியை உபயோகிப்பதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஐஸ்கட்டி ஒன்றை எடுத்து முகத்தில் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். முடிந்த அளவு இந்த ஐஸ்கட்டி மசாஜை காலையில் எழுந்ததும் செய்யலாம் அல்லது இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: முக அழகை கெடுக்கும் கருந்திட்டுகளையும், முகப்பருக்களையும் அடியோடு நீக்க இந்த எளிமையான ஃபேஷ் பேக்கை பயன்படுத்தினாலே போதும். முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் திகழும்.

பொதுவாக ஐஸ் கட்டியை வைத்து நாம் முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகம் என்றும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அதோடு இந்த வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ சாறு, கிரீன் டீ மற்றும் புதினா இவை அனைத்தும் சேர்ந்து முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகளை நீக்க உதவுவதோடு முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கிறது.

சற்று முன்