முகத்தில் ஏற்படக்கூடிய கருந்திட்டுகளும், முகப்பருக்களும், முகப்பருக்களால் ஏற்படக்கூடிய வடுக்களும் இல்லாமல், முகம் என்றுமே இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆண்கள் பெண்கள் என்று இரு பாலரும் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்குரிய மிகவும் எளிமையான நம் வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
அழகு என்றதும் நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது நம்முடைய முகம் தான். முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் எந்தவித மங்குகளும், கருந்துட்டுகளும், தேமல்களும், பருக்களும், கரும்புள்ளிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அந்த முகம் பிரகாசத்துடனும், மிருதுவாகவும், இளமையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் முகத்தை தான் அழகான முகம் என்று கூறுவோம். அப்படிப்பட்ட அழகான முகத்தை பெற வேண்டும் என்றுதான் ஆண்களும், பெண்களும் ஆசைப்படுகிறார்கள். இந்த ஃபேஸ் பேக்கை ஆண்கள் பெண்கள் என்று எந்தவித வேறுபாடும் இல்லாமல் உபயோகப்படுத்தலாம்.
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்க்க வேண்டும். தயிர் புளித்த தயிராக இருக்கக் கூடாது. அடுத்ததாக அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இதில் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை பயன்படுத்த வேண்டும். கடைசியாக இதை பேஸ்ட் பதத்திற்கு மாற்றுவதற்கு தேவையான அளவு பன்னீரை சேர்க்க வேண்டும். இப்பொழுது ஒரு ஸ்பூனை வைத்து பேஸ்ட் பதத்திற்கு இதை தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் பதப்படுத்திக் கொள்ளலாம். வெளியில் வைத்து உபயோகப்படுத்த முடியாது.
இந்த பேஸ்டை நாம் இரவு படுக்க செல்வதற்கு முன் நம் முகத்தை நன்றாக கழுவி துடைத்துவிட்டு அப்ளை செய்ய வேண்டும். முதலில் அப்ளை செய்யும்பொழுது இரண்டு நிமிடம் ஆவது முகத்தில் இந்த பேஸ்டை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும். இவை நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். பிறகு ஒரு துண்டை வைத்து நன்றாக துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடைசியாக முகத்தில் ஏதாவது ஒரு மாய்ஸ்சுரஸ் தடவிக்கொள்ள வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவிக் கொள்ளலாம் அல்லது விட்டமின் ஈ கேப்ஸ்யூல் தடவிக் கொள்ளலாம்.
முகப்பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் மசாஜ் செய்வதை தவிர்த்து விட்டு முகத்தில் தடவிக் கொண்டாலே போதும். மேலும் முகப்பரு இல்லாதவர்கள் பன்னீருக்கு பதிலாக எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்தும் இந்த பேஸ்ட்டை தயாரிக்கலாம். இந்த பேஸ்ட்டை நாம் தினமும் உபயோகித்து வந்தால் முகம் பிரகாசம் அடையும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருத்திட்டுக்கள், கருவளையம் அனைத்தும் நீங்கும். பருக்கள் ஏற்படுவது குறையும். முகத்தில் இருக்கக்கூடிய ஓபன் போஸ் அனைத்தும் மறைய ஆரம்பிக்கும். மிருதுவாகவும், இளமையாகவும், அதே சமயத்தில் பிரகாசமாகவும் திகழும்.
இதையும் படிக்கலாமே: ஒரே இரவில் பிரகாசமான முக அழகை கொடுக்கும் ஓட்ஸ். கருப்பா இருக்கிறோமே என்கின்ற கவலை இனி ஒருத்தருக்குமே வரக்கூடாது.
இந்த பேக்கை ஆண்களும் பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் என்பதால் அது ஆண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் முகத்தை பிரகாசமாக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.