- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சேலத்து ஸ்பெஷல் அலா புட்டு செய்வது எப்படி?

சேலத்து ஸ்பெஷல் அலா புட்டு செய்வது எப்படி?

- Advertisement -

அந்த காலத்து உணவு என்றாலே ருசியோடு சேர்த்து ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். இந்த காலத்தில் நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஆரோக்கியம் இல்லை. சொல்லக்கூடிய அளவுக்கு ருசியும் இல்லை. சேலத்தில் பிரபல்யமாக விற்கப்படும் அலா புட்டு நம்முடைய வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இது. இந்த புட்டை ருசித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. ரெசிபி தெரிந்தால் நம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்று சொல்பவர்களுக்காக பழமையை நினைவு கூறும் ரெசிபி இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 1 கப்
தண்ணீர் – 3 கப்
தூள் வெல்லம் – 2 கப்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 கைப்பிடி அளவு
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

எந்த கப்பில் அரிசியை அளந்து கொள்கிறீர்களோ, அதே கப்பில் தண்ணீரையும் வெல்லத்தையும் அளந்து வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் புழுங்கல் அரிசியை இரண்டிலிருந்து மூன்று முறை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த இந்த அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். இட்லி மாவுக்கு மாவு அரைப்போம் அல்லவா அதே அளவு தண்ணீரை ஊற்றி அரைக்கலாம். ஆனால் கொரகொரப்பாக அரிசி இருக்கக் கூடாது. நைசாக அரைபட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது அரைத்த இந்த மாவில் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கரைத்து தனியாக வைத்து விடுங்கள். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் 2 கப் அளவு தூள் வெல்லத்தை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி வெல்லத்தை கரைத்து வடிகட்டி, மற்றொரு கடாயில் மாற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து, இந்த வெல்ல கரைசலை அடுப்பில் வையுங்கள். இந்த வெல்லக் கரைசலில் நாம் ஏற்கனவே தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். மாவு கட்டிகள் விழக்கூடாது.

- Advertisement -

இந்த மாவு வெல்லக் கரைசலுடன் சேர்ந்து அப்படியே அல்வா போல திக்காகி நமக்கு கிடைக்கும். அந்த சமயத்தில் நறுக்கிய தேங்காய் பந்தைகளை இதில் போட்டு ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். காட்டன் வெள்ளைத் துணியை தண்ணீரில் நனைத்து, நன்றாக பிழிந்து ஒரு டேபிள் மேலே விரித்து விடுங்கள்.

இதன் மேலே நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து அந்த துணியில் வைக்க வேண்டும். சின்ன சின்ன போண்டா அளவு வைத்தால் போதும். ஒரு சின்ன குழி கரண்டியில் நெய் தடவிக்கோங்க. நெய் தடவிய கரண்டியில் இந்த அல்வா போல இருக்கும் மாவை எடுத்து எடுத்து துணியின் மேலே வைக்கணும்.

ஒரு மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரம் வரை அது அப்படியே ஆரட்டும். அவ்வளவுதான். அல்வாவும் புட்டு, சேர்ந்த அலா புட்டு தயார். அல்வா பதத்தில் செய்த இந்த கலவையை வெள்ளை துணியில் வைத்து ஆற வைத்து, புட்டாக மாற்றி விட்டோம். இதற்கு பெயர் தான் அலா புட்டு.

இதையும் படிக்கலாமே: ரொம்பவே சிம்பிளான அதேசமயம் சத்தான குடைமிளகாய் சட்னி

முன்னோர்கள் எப்படி சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார்கள் என்று பாருங்கள். இதில் சுவையும் சூப்பராக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமும் தரும் இந்த பழமையான ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்டையும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்