நம் அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சினையாக கருதப்படுவது தான் பல்லிகள். இந்த பல்லிகள் பொதுவாக அனைத்து இடங்களிலும் காணப்பட்டாலும் நம் வீட்டிற்குள் இருந்து கொண்டு அதுவும் குறிப்பாக சமையலறையில் இருப்பதன் மூலம் நமக்கு பல ஆரோக்கிய கேடுகள் உருவாகின்றன. இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டில் இருக்கும் பல்லியை விரட்டுவதற்கு உதவக்கூடிய பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பல்லிகளில் விஷத்தன்மைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த பல்லிகளுக்கு சிறுசிறு பூச்சிகள் உணவாக இருக்கின்றன என்பதால் அந்த பூச்சிகளை உண்பதற்காக நம் வீட்டில் இருக்கக்கூடிய சமையலறையில் இந்த பல்லிகள் இருக்கும். பொதுவாக பழங்களை நாம் வாங்கி வைக்கும் பொழுது அந்த பழங்களுக்காக சிறு சிறு பூச்சிகள் வருவதுண்டு. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்காக பல்லிகள் வரும். அப்படி வரும் பல்லிகள் தங்களை அறியாமல் அந்த பழத்தில் வாயை வைத்து விடும்.
இதை தெரியாமல் நாமோ அல்லது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளோ அதை உண்ணும் பொழுது அதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோல் நாம் சமைத்து வைத்திருக்கும் பாத்திரத்திலும் வாயை வைக்கலாம் அல்லது நாம் சாப்பிடுவதற்காக உபயோகப்படுத்தும் தட்டிலோ தண்ணீரிலோ பல்லிகள் வாயை வைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு முறையும் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக கழுவி விட்டு உபயோகப்படுத்தும் முறையை நம்மால் எப்பொழுதும் கடைபிடிக்க முடியாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவசரத்திற்காக பாத்திரத்தை கழுவாமல் உபயோகப்படுத்தும் பொழுது அதனால் பிரச்சனைகள் ஏற்படும்.
சரி இப்பொழுது பல்லியை விரட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம். பல்லிக்கு பிடிக்காத வாடைகள் என்று இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது தான் வெங்காய வாடை. இந்த வெங்காய வாடை மனிதர்களில் பல பேருக்கு பிடிக்காது. அதே போல் பல்லிகளுக்கும் பிடிக்காது.
ஒரு வெங்காயத்தை நறுக்கி சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் பத்து கிராம்பு, பத்து மிளகு போட்டு சூடாக இருக்கும் தண்ணீரை அதில் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அரை மணி நேரம் கழித்து அதை திறந்து பார்க்கும் பொழுது கிராம்பு மற்றும் மிளகின் சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கி இருக்கும். இப்பொழுது அந்த தண்ணீரையும் வடிகட்டி எடுத்துக்கொண்டு வெங்காய சாறுடன் கலந்து கொள்ள வேண்டும்.
கலந்த இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி பல்லிகள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஸ்பிரே செய்து விட வேண்டும். இப்படி செய்து விட்டால் அதில் இருக்கக்கூடிய வாடைக்கு பல்லிகள் நம் வீட்டை விட்டு ஓடியே போய்விடும்.
இதையும் படிக்கலாமே: வீட்டிற்குள் இருக்கும் கொசுவை விரட்டி அடிக்கவும் கொசு கடிக்காமல் இருக்கவும் எளிய வழி.
இந்த எளிய முறையில் நமக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் பல்லிகளை வீட்டை விட்டு விரட்டி அடிக்க முடியும்.