- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகத்தை பிரகாசமாக உதவும் ஆரஞ்சு பேஷியல்.

முகத்தை பிரகாசமாக உதவும் ஆரஞ்சு பேஷியல்.

- Advertisement -

முகம் பிரகாசமாக இருக்க வேண்டும். வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நபர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் இந்த பேஷியலை உபயோகப்படுத்தினால் போதும். அப்படிப்பட்ட பேஷியலை எப்படி செய்வது எந்த பொருட்களை வைத்து செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கெமிக்கல்கள் அற்ற இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே செய்யக்கூடிய பேசியலுக்கு நம் சருமத்தை பாதுகாக்க கூடிய தன்மைகள் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் பேஷியல் செய்வதற்காக நாம் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களாலும் நம் அழகு என்பது மேம்படும். அந்த வகையில் இன்று நாம் பேஷியல் செய்வதற்காக உபயோகப்படுத்தக்கூடிய பொருள்தான் ஆரஞ்சு பழம்.

- Advertisement -

பொதுவாக ஆரஞ்சு பழ தோளில் அதிகமான சத்துக்கள் இருக்கிறது என்பதால் அதை முகம் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது. பேசியல் செய்வதற்கு முதலில் இறந்த செல்களை நீக்க வேண்டும். அதற்கு இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு பழசாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழசாரை சேர்த்து ஒரு ஸ்பூன் அளவிற்கு சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் இரண்டு நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளும் இறந்த செல்களும் நீங்கி முகம் ஒருவித புத்துணர்ச்சியை பெரும்.

அடுத்ததாக ஆரஞ்சு பழ பேஸ் பேக். இதற்கு இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள் இவை மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் வரை அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

- Advertisement -

மூன்றாவதாக முகத்திற்கு மசாஜ் தர வேண்டும். இதற்கு ஆரஞ்சு பழச்சாறை ஐஸ் கியூபில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும்.ஐஸ் கட்டியாக மாறிய பிறகு அந்த ஐஸ்கட்டியை எடுத்து முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக முகத்தில் ஒருவித இறுக்கம் ஏற்பட்டு முதுமை தோற்றம் என்பது முற்றிலும் மறைந்து இளமையாகவும் அதே சமயம் வெண்மையும் பொலிவும் ஏற்படும்.

ஆரஞ்சு பழத்தில் இருக்கக்கூடிய ஆக்சைடு முகத்தில் ஒருவித பொலிவையும் பிரகாசத்தையும் உண்டு பண்ணும். மேலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் முகத்தை வெண்மையாக்க உதவுகிறது. மேலும் இதில் நாம் பயன்படுத்தக்கூடிய கடலை மாவு முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி தளர்ந்த சருமத்தை இளமையுடனும் பொலிவுடன் காட்ட உதவுகிறது. ஆண்களாக இருக்கும் பட்சத்தில் கஸ்தூரி மஞ்சளை மட்டும் தவிர்த்து விட்டு இதே பேசியல் முறையை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: மூன்றே நாளில் தேமல் சொறி சிரங்கு மறைய

இந்த முறையில் வீட்டிலேயே நாம் வாரத்தில் இரண்டு நாட்கள் பேஷியல் செய்வதன் மூலம் நம்முடைய முகம் என்றுமே 16 போல் இளமையுடன் இருக்கும்.

சற்று முன்