மூன்றே நாளில் தேமல் சொறி சிரங்கு மறைய

lady bettal leaf
- Advertisement -

உடம்பில் ஆங்காங்கே வெள்ளையாகவோ அல்லது சிகப்பு திட்டாகவும் தோன்றும் தேமல், சொறி போன்றவை ஒரு முறை வந்து விட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினம். இதற்கென நீங்கள் மருந்து மாத்திரை கெமிக்கல் கலந்த கீரீம்களை பயன்படுத்தினாலும் சரியானது போல் தோன்றினாலும் மறுபடியும் வந்து விடும். இந்த அழகு குறிப்பு பதிவில் தேமல் சொறி சிரங்கு போன்றவை நிரந்தரமாக சரியாக கூடிய ஒரு அருமையான குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேமல் படை சொறி சிரங்கு சரியாக

இதற்கு கொஞ்சம் பப்பாளி இலைகள் மற்றும் வெற்றிலை, துளசி மூன்றையும் எடுத்து கொள்ளுங்கள். இதில் பப்பாளியின் அளவு கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையும், துளசியும் அதில் பாதி அளவு எடுத்தால் போதும். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து இத்துடன் தோலுரிக்காத நான்கு பல் பூண்டு, பாதி எலுமிச்சை பழம் அல்லது எலுமிச்சை பழ தோல் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை மைய அரைக்க முடியாது கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும்.

- Advertisement -

இதை அப்படியே ஒரு வடிகட்டியில் வடித்து தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து விடுங்கள். மேலே இருக்கும் திப்பி போன்ற பகுதியை கீழே போட்டு விடாமல் அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பேபி சோப்பை எடுத்து அதில் கால் பங்கு சோப்பை மட்டும் டபுள் பாயில் முறையில் அடுப்பில் வைத்து உருக்குங்கள். அதில் நீங்கள் வடிகட்டி வைத்திருக்கும் சாறை ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

இப்போது நன்றாக சூடேறிய இந்த கலவையை ஆற வைத்த பிறகு ஒரு சோப்பு தயாரிக்கும் மோல்டு இருந்தால் அதை ஊற்றிக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் வேறு ஏதேனும் ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை வைத்து எடுத்து விட்டால் ஒரு அருமையான மூலிகை சோப்பு தயார். இந்த சோப்பை பயன்படுத்தி தினமும் குளித்து வந்தால் தோல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாவதுடன், தோல் நல்ல மினுமினுப்பு தன்மையுடன் பார்க்க நன்றாக இருக்கும்.

- Advertisement -

ஒரு வேளை உங்களுக்கு இப்படி சோப்பாக தயாரிப்பது பிடிக்கவில்லை எனில் அரைத்த விழுதை அப்படியே உடம்பில் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பிறகும் குளிக்கலாம். இந்த முறையும் நல்ல பலன் அளிக்கும் ஆனால் இப்போதுள்ள நடைமுறை வாழ்க்கையில் நாம் தினமும் இது போல அரைத்து தேய்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் சோப்பாக தயாரித்து வைத்து விட்டால் தினமும் அதை பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

இப்படி அரைக்கும் போது மீதமாகும் அந்த திப்பியை கூட கீழே தூக்கி போடாமல் அதையும் உடம்பில் தேய்த்து குளித்து விடலாம். தோல் தொடர்பான பிரச்சனைகளை அவ்வளவு எளிதில் சரி செய்ய முடியாது. ஏனெனில் அதில் இருக்கும் நுண்ணுயிரிகள் உள்ளுக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்தப் பிரச்சனையானது உங்களுக்கு இப்போது தான் தோன்றியதாக இருந்தால் இந்த முறையால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே சரியாகி விடும்.

இதையும் படிக்கலாமே: இந்த முறைப்படி ஒரு முறை வீட்டிலேயே ஃபேஷியல் செய்து பாருங்கள்.

ஒரு வேளை உங்களுக்கு நாள்பட்ட பிரச்சனை இருக்குமேயானால், இந்த முறையில் தொடர்ந்து தேய்த்து குளிக்கும் போது நிச்சயம் விரைவில் நல்ல பலனைத் தரும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருக்குமேயானால் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தாமல் இதுபோல இயற்கையான முறையில் தயாரித்து பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -