- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளரச் செய்யும் ஹேர் மாஸ்க்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளரச் செய்யும் ஹேர் மாஸ்க்

- Advertisement -

தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது அனைவரும் அனுபவிக்கும் பிரச்சினை தான். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக பல ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க் என்று பயன்படுத்துவோம். அப்படி நாம் பல வகைகளில் பயன்படுத்தியும் நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை நிற்கவில்லை என்னும் பட்சத்தில் வெந்தயத்துடன் எந்த பொருளை சேர்த்து ஹேர் மாஸ்காக பயன்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த ஹேர் மாஸ்கை நாம் பயன்படுத்துவதன் மூலம் தலைமுடி உதிர்தல் பிரச்சினை என்பது ஒரு முறை பயன்படுத்தும் போதே குறைவதை நம்மால் உணர முடியும். அதோடு மட்டுமல்லாமல் நம் தலைமுடியில் இருக்கக்கூடிய பொடுகு, அரிப்பு போன்ற அனைத்தும் நீங்கும். தலைமுடியின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். இப்படி இவ்வளவு பலன்களை கொண்ட ஹேர் மாஸ்கை நாம் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த ஹேர் மாஸ்கை நாம் தயார் செய்வதற்கு முதலில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து ஊறவைத்த தண்ணீருடன் வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் சேர்க்க வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு பொருள்தான் இஞ்சி.

இஞ்சியை நம்முடைய தலைக்கு நாம் பயன்படுத்தும் பொழுது அது நல்ல ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தித் தரும். மேலும் பொடுகு பிரச்சினையை முற்றிலும் நீக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பொழுது அந்த இடத்தில் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படாது. முடியும் அடர்த்தியாக வலுவாக வளர ஆரம்பிக்கும். இந்த இஞ்சியை தோலை நீக்கிவிட்டு நன்றாக உரசி அதிலிருந்து சாறை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை நாம் ஊறவைத்து அரைத்து வைத்தோம் என்றால் அதனுடன் ஒன்றரை ஸ்பூன் அளவிற்கு இஞ்சி சாரை நாம் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். நம்முடைய தலையின் வேர்க்கால்களில் ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் பரவலாக தேய்க்க வேண்டும். பிறகு தலை முடியிலும் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து விட வேண்டும். இதில் நாம் இஞ்சியை சேர்ப்பதால் வெந்தயத்தின் குளிர்ச்சியை இஞ்சி சமன்படுத்தி விடும் என்பதால் சளி பிடிக்கும் பிரச்சனையும் ஏற்படாது. 20 நிமிடம் கழித்து எப்போதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும்.

அவ்வளவுதான் ஒருமுறை இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தினாலே நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது குறைய ஆரம்பித்து விடும். வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் போது நம் தலைமுடியில் இருக்கக்கூடிய பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முடி அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: பாதாம் கிரீம் மற்றும் பாதாம் ஃபேஸ் மாஸ்க்

மிகவும் எளிமையாக தயார் செய்யக்கூடிய இந்த ஹேர் மாஸ்கை நாம் பயன்படுத்தி நம் தலைமுடி உதிர்தல் பிரச்சினையை முற்றிலுமாக நீக்குவோம்.

சற்று முன்