- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி வளர்ச்சியை தூண்டும் ஹேர் மாஸ்க்

முடி வளர்ச்சியை தூண்டும் ஹேர் மாஸ்க்

- Advertisement -

இன்றைய காலத்தில் முடிக்குரிய பிரச்சினை என்று பார்த்தால் முதலில் வருவது முடி உதிர்தல் பிரச்சினை தான். இந்த முடி உதிர்தல் பிரச்சனை பல காரணங்களால் ஏற்படக் கூடும். அப்படிப்பட்ட காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை நாம் செய்தால் தான் நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது தடுக்கப்படும். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்து முடியை வளர செய்வதற்கு ஒரு ஹேர் மாஸ் உதவி செய்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அந்த ஹேர் மாஸ்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

என்னதான் நாம் ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் என்று உபயோகப்படுத்தினாலும் ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்ளும் பொழுது விரைவிலேயே நம்முடைய முடி உதிர்தல் பிரச்சனை என்பது நின்று முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். மேலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் தான் நிரந்தரமான முடிவை நம்மால் பெற முடியுமே தவிர்த்து செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அதிகப்படியான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

இந்த ஹேர் மாஸ்கை செய்வதற்கு முன்பாக தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து அதை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவி மசாஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நாம் செய்யும் பொழுது நம்முடைய முடியின் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமான அளவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அரை மணி நேரம் கழித்து தான் இந்த ஹேர் மாஸ்கை நாம் தலையில் தடவ வேண்டும்.

இந்த ஹேர் மாஸ்கை செய்வதற்கு நமக்கு கற்றாழையின் சோற்றுப் பகுதி தேவைப்படும். இயற்கையில் கிடைக்கக்கூடிய கற்றாழையை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். கிடைக்காத பட்சத்தில் ஜெல்லை பயன்படுத்திக் கொள்ளலாம். அரை கப் அளவிற்கு கற்றாழை சோறை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை, பத்து துளசி இலைகள், இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், 5 செம்பருத்தி இலை, ஊற வைத்த வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து இந்த ஹேர் மார்க்கை தலையில் தடவ வேண்டும். குறைந்தது 15 நிமிடத்தில் இருந்து அரை மணி நேரம் வரைக்கும் இதை தலையில் அப்படியே வைத்துக் கொள்ளலாம். சிறு சிறு பாகங்களாக பிரித்து இந்த ஹேர் மாஸ்கை தடவு வேண்டும்.

இந்த ஹேர் மாஸ்கை நம் தலையில் தடவுவதன் மூலம் தலைமுடி உதிர்தலுக்குரிய காரணங்கள் அனைத்தையும் சரி செய்யக்கூடிய அற்புதமான ஆற்றல் இந்த ஹேர் மாஸ்கில் இருப்பதால் நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது நீங்கும். மேலும் புதிய முடி வளர்வதற்குரிய தூண்டுதலையும் இது ஏற்படுத்தும். அதிகமான முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற வீதம் இந்த ஹேர் மாஸ்கை பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: துளசி அழகு குறிப்பு

ஒரு மாதத்திலேயே முடி உதிர்தல் குறைவதோடு மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியையும் நம்மால் காண முடியும்.

சற்று முன்