- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சம்பா ரவை தோசை செய்முறை

சம்பா ரவை தோசை செய்முறை

- Advertisement -

காலை மற்றும் இரவு வேலைகளில் டிபன் வகைகளை சாப்பிடும் பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. அதுவும் இன்றைய காலத்தில் சுகர், பிபி என்று வயதான நபர்கள் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே இட்லி தோசை என்று செய்வோம். அரிசி சம்பந்தப்பட்ட இந்த இட்லி தோசைக்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த சம்பா ரவையை வைத்து டிபன் செய்து தரலாம்.

பொதுவாக சம்பா ரவையில் கஞ்சி, உப்புமா என்று செய்வதற்கு பதிலாக சம்பா ரவையை பயன்படுத்தி தோசை ஊற்றி தருவதன் மூலம் அரிசி சேர்க்காத ஆரோக்கியமான சம்பா ரவை தோசையை சாப்பிட்டு வயிறு நிரம்பும் சூழ்நிலை உண்டாகும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் சம்பா ரவையை வைத்து எப்படி மிகவும் எளிமையான வழியில் தோசை செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சம்பா ரவை – 1/4 கி
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • இஞ்சி – 1 இன்ச்
  • காய்ந்த மிளகாய் – 5
  • சின்ன வெங்காயம் – 5
  • அரிசி மாவு – 1/4 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • கருவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் சம்பா ரவையை தண்ணீர் ஊற்றி கழுவி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அழித்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் கழுவி வைத்திருக்கும் சம்பா ரவையையும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு பவுலில் ஊற்றி இதனுடன் அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பச்சரிசியை சேர்த்தால் தோசை மொறு மொறுப்பாக வரும். பச்சரிசியை சேர்க்காமலும் இந்த தோசையை ஊற்றலாம். தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் அதை தட்டை வைத்து மூடி ஊற விட வேண்டும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து இதை அப்படியே எடுத்து தோசை கல்லில் தோசையாக ஊற்றி சாப்பிடலாம் அல்லது இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கேரட், 1/4 ஸ்பூன் சோம்பு, துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன், ஒரு கப் முருங்கைக்கீரை இவற்றை சேர்த்து நன்றாக கலந்து அடை தோசை போல் சிறிது கனமாக ஊற்றியும் செய்யலாம்.

இந்த இரண்டு வழிகளில் நம்முடைய நேரத்திற்கு ஏற்றார் போல் எந்த தோசையை வேண்டுமானாலும் நாம் செய்து தரலாம். மிகவும் சுவையான கோதுமை ரவை தோசை தயாராகி விட்டது. இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமாக இருக்கக்கூடிய வெங்காய சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றை நாம் செய்து தரலாம். தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமலும் சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: மீதமான சாதத்தில் பால் கொழுக்கட்டை

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த தோசை திகழ்வதோடு மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகும்.

சற்று முன்