- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅடகு வைத்த நகையை மீட்க வழிபாடு

அடகு வைத்த நகையை மீட்க வழிபாடு

- Advertisement -

கடன் என்ற ஒன்று நம் வாழ்வில் வந்துவிட்டால் நிம்மதி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும். மேலும் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகளும் ஏற்படும். அதிலும் குறிப்பாக நகையை அடமானம் வைத்து விட்டால் அதை திரும்பும் வரை வீட்டில் சண்டைகள் என்பது ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அடகு வைத்த நகையை திருப்புவதற்கு செய்யக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கையில் நகைகளை அடமானம் வைக்க போகிறார்கள் என்றால் அவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் இல்லை என்று தான் அர்த்தம். எவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவானால் பாதிப்பு ஏற்படுகிறதோ அவர்கள் கண்டிப்பான முறையில் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய நகையை அடமானத்தில் வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது அடமானம் வைத்து நகையை திருப்ப வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் சுக்கிர பகவானின் அருள் நமக்கு வேண்டும். இப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக புதன், வியாழன், வெள்ளி இந்த மூன்று கிழமைகளிலும் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். புதன்கிழமை சுக்கிர ஹோரை என்பது மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரைக்கும், இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரைக்கும் இருக்கும். இதே போல் வியாழக்கிழமை சுக்கிர ஹோரை என்பது காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள்ளும் இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள்ளும் இருக்கும். இதே போல் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை என்பது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும், இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள்ளும் இருக்கும்.

இந்த நேரத்தில் தான் நாம் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஏலக்காய் தேவைப்படும். பச்சை நிற நூல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நூலில் 27,57,108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காய்களை கோர்க்க வேண்டும். இப்படி நாம் ஏலக்காய்களை கோர்க்கும் இடமானது வீட்டின் பூஜையறை, கோசாலை, துளசி இருக்கும் இடம், மொட்டை மாடி போன்ற இடங்களாக இருக்க வேண்டும். வேறு எந்த இடத்திலும் இந்த மாலையை கோர்க்கக்கூடாது.

- Advertisement -

சுக்கிர ஹோரை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த மாலையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்., சுக்கிர ஹோரை நடக்க ஆரம்பிக்கும் பொழுது அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு இந்த மாலையை அணிவிக்க வேண்டும். அருகில் பெருமாள் ஆலயம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு இந்த மாலையை அணிவிக்கலாம். முடிந்த அளவிற்கு ஆலயத்திற்கு சென்று மாலையை சாற்றுவது என்பது அதிகளவு பலனைத் தரும்.

பிறகு வீட்டிற்கு வந்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சுமங்கலி பெண்களுக்கு பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருளை தானமாக கொடுக்க வேண்டும். அதனுடன் சுமங்கலி செட்டையும் தானமாக கொடுத்து அவர்களிடமிருந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இப்படி தொடர்ந்து நாம் செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நாம் அடகு வைத்த நகையையும் நம்மால் மீட்க முடியும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் மற்றும் சுக்கிரனின் பரிபூரணமான அருளை பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

சற்று முன்