பித்ரு தோஷம் நீங்க வழிபாடு

pithru dosham
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் அவர்களுடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கின்றன. ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவித நன்மையும் நடக்காமல் அப்படியே நன்மைகள் நடக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு தடங்கலாகவே செல்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பித்ரு தோஷம் இருக்குமாயின் அவர்களின் வாழ்க்கையில் எந்த நன்மையும் நடக்காது. அதற்கு முதலில் அவர்கள் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மிகவும் எளிமையான வகையில் எந்த நாளில் சென்று சிவன் கோவிலில் தீபம் ஏற்றினால் பித்ரு தோஷம் நீங்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக வேண்டும். அப்படி முன்னோர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முறையாக முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வருவார்கள். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இப்படி முன்னோர்களின் நினைத்து தர்ப்பணம் செய்பவர்களின் வாழ்க்கையில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

தாய் தந்தை இழந்தவர்கள் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நம்முடைய மூதாதையர்களை நினைத்தும் நாம் தர்ப்பணம் செய்யலாம். அவர்களின் பெயர்கள் தெரியாது, அவர்கள் யார் என்று தெரியாது என்று நினைப்பவர்களும், பெற்றோர்கள் இல்லாமல் இருப்பவர்களும் தங்கள் வாழ்க்கையில் தடைகள் ஏற்பட்டு இருக்குமாயின் அதற்கு பித்ரு தோஷம் காரணமாக இருக்கும் என்று கருதலாம்.

அப்படிப்பட்டவர்கள் தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள் என்றால் அமாவாசை தினத்தன்று காலையில் எழுந்து சுத்தமாக நீராடி காக்கைக்கு அன்னம் வைக்க வேண்டும். அப்படி காக்கைக்கு அன்னம் வைக்கும் பொழுது அதில் சிறிது கருப்பு எல்லை கலந்து வைக்க வேண்டும் மேலும் பயன்படுத்தாத சுத்தமான தயிரையும் அதில் ஊற்றி வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் பித்ரு தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் அன்று மாலை 6:00 மணிக்கு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு செல்லும்பொழுது பெரிய அகல் விளக்கு ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணையை ஊற்றி திரி போட்டு சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி “என் வம்சாவளியில் வந்த அனைத்து முன்னோர்களும் சாந்தி பெற வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டு வரவேண்டும்.

இப்படி ஒவ்வொரு அமாவாசை தூறும் நாம் சிவன் கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபடுவதும் காக்கைக்கு அன்னம் அளிப்பதும் இயன்றவர்கள் அன்றைய தினத்தன்று மதிய வேளையில் வயதான முதியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது போன்ற செயல்களை செய்வதன் மூலம் பித்ருக்களால் ஏற்பட்ட தோஷம் படிப்படியாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே: மந்திரமும் வழிபாடும் அதிக பலன் தர

மிகவும் எளிமையான இந்த பித்ரு தோஷ வழிபாட்டை மேற்கொண்டு நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கலாம்.

- Advertisement -