- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பரிகாரம்

பெண்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தீர பரிகாரம்

- Advertisement -

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வெறும் செல்வக் கடாட்சம் மட்டும் இருந்தால் போதாது. அவர்கள் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். அப்போதுதான் ஒரு குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஒரு சில குடும்பத்தில் பார்த்தால், பெண்கள் எப்போதும் தீராத நோயால் அவதிப்பட்டு வருவார்கள்.

ஸ்கேன் எடுப்பாங்க, ரத்த பரிசோதனை செய்வாங்க, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று பணத்தை செலவு செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் ரிசல்ட் நார்மலாக இருக்கும். உடலில் எந்த விதமான மருத்துவம் சார்ந்த பிரச்சனையும் கிடையாது. உடல் உபாதைகளும் கிடையாது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் நம்முடைய ஆரோக்கியம் சீர்படாமலேயே இருக்கும்.

- Advertisement -

என்ன பிரச்சனை என்று தெரியாமல் குழம்பிக் கொண்டே இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்தால் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே தீரும். அது என்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடு தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தில் இருக்கும் குழப்பநிலை மாற

எனக்கு கர்ப்பப்பை பிரச்சனை இருக்கிறது, எனக்கு தைராய்டு பிரச்சனை இருக்கிறது, எனக்கு சுகர் இருக்கிறது, பிபி இருக்கிறது என்று வியாதியை பற்றி தெரிந்தவர்கள் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது. என்னவென்றே தெரியாமல் உடல் உபாதையில் குழம்பி இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்யணும்

- Advertisement -

மாதத்தில் ஒரு நாள் உத்திராடம் நட்சத்திரம் வரும். அந்த நட்சத்திரம் வரும்போது உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள். சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சன்னிதானத்தில், சூரிய கிரகம் இருக்கும் அல்லவா. அந்த சூரிய பகவானுக்கு 2 நெய் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, நவகரத்தை சுற்றி வழிபாடு செய்து கொள்ளுங்கள்.

பெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க நிச்சயமாக உங்களுடைய பிரச்சனை சரியாகிவிடும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் இருக்கும் குழப்பம் தெளிவு பெறும். சில கணவன்மார்களுக்கு ரொம்ப மனக் கவலை இருக்கும். என்னுடைய மனைவிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் மருத்துவ செலவாகிக் கொண்டே இருக்கிறது. அவளால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை. வீட்டை கவனிக்க முடியவில்லை என்ற கவலை இருக்கும். அப்படிப்பட்ட கணவன்மார்கள், மனைவிக்காக உத்திராட நட்சத்திரத்தில் இந்த பரிகாரத்தை செய்து வேண்டுதல் வைத்தாலும், அது பலிக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: திருமணம் ஆகாத பெண்கள் செய்ய வேண்டிய துர்க்கை அம்மன் வழிபாடு

இத்தனை குறிப்பிட்ட நாள்தான் விளக்கு போட வேண்டும் என்ற கணக்கு கிடையாது. மாதம் தோறும் வரும் உத்திராட நட்சத்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிவன் கோயிலுக்கு போய் இந்த விளக்கை ஏத்திடுங்க. நல்லது நடக்கும். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்