- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண பிரச்சனை தீர மா இலை வழிபாடு

பண பிரச்சனை தீர மா இலை வழிபாடு

- Advertisement -

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக திகழ்வது பணம் தான். பணம் தொடர்பாக நமக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டத்தையே உண்டாக்கும். அப்படிப்பட்ட பணம் தொடர்பான பிரச்சனைகள் தீருவதற்கும், கடன் சுமை குறையவும், பணவரவை அதிகரிக்கவும் வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடிய ஒரு மாயிலை வழிபாட்டை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மாயிலை. பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மாவிலையை பயன்படுத்தி வீட்டு வாசலில் தோரணம் கட்டுவார்கள். அதே போல் ஏதாவது ஒரு யாகம் நடத்துவதாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் கலசம் வைப்பதாக இருந்தாலும் சரி அதில் மாயிலைகள் தான் பயன்படுத்துவார்கள். இந்த மாயிலையில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் இருக்கிறதோ அதே அளவிற்கு தெய்வீக ஆற்றலும் இருக்கிறது.

- Advertisement -

மாயிலை ஒருவருடைய இல்ல வாசலில் இருக்கும் பட்சத்தில் அந்த இல்லத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாயிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

மாயிலையில் மகாலட்சுமி தாயார் குடியிருக்கிறார் என்பது அங்தீகம். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரயான காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணி, மதியம் 1:00 மணியில் இருந்து 2:00 மணி, இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணி இந்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாயிலைகளை பறித்துக் கொள்ளுங்கள். அந்த மாயிலைகளில் பூச்சிகள் எதுவும் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த மா இலைகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக இந்த வழிபாட்டிற்கு நமக்கு சுத்தமான தேன் தேவைப்படும். இந்த தேனை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி நம்முடைய மோதிர விரலால் தேனை தொட்டு மாயிலையில் தடவ வேண்டும். அடுத்ததாக இந்த மாஇலைக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து அதை அப்படியே சுருட்டி மாலையாக கட்ட வேண்டும். வெற்றிலை மாலை கட்டுவோம் அல்லவா அதே போல் மாலையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த மா இலை மாலையை நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மன், மகாலட்சுமி, வாராகி இப்படி எந்த அம்மன் படம் வீட்டில் இருக்கிறதோ அந்த அம்மனுக்கு இந்த மாயிலை மாலையை சாற்ற வேண்டும். தங்களால் இயன்ற நெய்வேத்தியத்தை அம்மனுக்கு வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பணரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் இந்த மாலையை எடுத்து அருகில் இருக்கும் ஆலயத்தில் இருக்கக்கூடிய மரத்தடியில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த இலையில் இருக்கக்கூடிய தேனை உண்பதற்காக எறும்புகள் தேடி வரும். இதனால் நம்முடைய கர்ம வினைகள் குறையும். கர்ம வினைகள் குறைவதால் பணரீதியான பிரச்சினைகளும் குறைந்து நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: அடகு வைத்த பொருட்கள் மீண்டும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்க வழிபாடு

மிகவும் எளிமையான இந்த மாலையை நம்பிக்கையுடன் கட்டி அம்மனுக்கு சாற்றி, பணரீதியான பிரச்சினையில் இருந்து வெளியில் வருவோம்.

சற்று முன்