- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுர்க்கை அம்மனுக்கு நெல்லிக்காய் மாலை

துர்க்கை அம்மனுக்கு நெல்லிக்காய் மாலை

- Advertisement -

நம்முடைய துன்பங்களை நீக்கக்கூடிய தெய்வமாக திக்பவள்தான் துர்க்கை அம்மன். பொதுவாக துர்க்கை அம்மனை பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக முறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் எலுமிச்சம் பழத்தை பயன்படுத்துவார்கள். எலுமிச்சை பழத்தை நறுக்கி தீபம் ஏற்றி வழிபடும் பழக்கமோ அல்லது மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு சாற்றும் பழக்கமோ இருக்கும். எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக நெல்லிக்காயை மாலையாக சாற்றி வழிபடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.

பிரிந்த உறவு சேர மற்றும் பணம் சேர வழிபாடு

மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கனியாக திகழ்வது தான் நெல்லிக்கனி. நெல்லிக்கனி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயாரின் அருளும் நாராயணனின் அருளும் பரிபூரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நெல்லிக்கனியை மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு நாம் சாற்றும் பொழுது நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பணரீதியாக ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலக வேண்டும் என்றால் குருபகவானின் அருள் நமக்கு வேண்டும். குருபகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் 21 நெல்லிக்காய்களை வாங்கி வந்து மாலையாக கோர்த்து துர்க்கை அம்மனுக்கு சாற்றி தங்களால் இயன்ற வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

பிறகு அந்த நெல்லிக்கனி மாலையை வாங்கி அதில் இருக்கக் கூடிய நெல்லிக்கனிகளை அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தந்துவிட்டு ஒரே ஒரு நெல்லிக்கனியை மட்டும் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். கடன் சுமை குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதே போல் ஒருவருக்கு திருமண தடை ஏற்பட்டு இருக்கிறது அல்லது கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பிரிந்து விட்டனர், திரும்பவும் ஒன்று சேர வேண்டும் என்றாலோ திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்றாலோ செவ்வாய் பகவானின் அருள் வேண்டும். அதனால் செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் துர்க்கை அம்மனுக்கு இதே முறையில் 27 நெல்லிக்கனிகளை மாலையாக தொடுத்து சாற்ற வேண்டும்.

தங்களால் இயன்ற வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு மாலையை வாங்கி அங்கு வரும் பக்தர்களுக்கு நெல்லிக்கனிகளை பிரசாதமாக தர வேண்டும். ஒரு நெல்லிக்கனியை மட்டும் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் பிரிந்த உறவுகள் ஒன்று சேருவர்.

- Advertisement -

இந்த நெல்லிக்காய் மாலையை கோர்க்கும் பொழுது நாம் எந்த பிரச்சனைக்காக இந்த வழிபாட்டை செய்கிறோமோ அந்த பிரச்சினையை மனதார நினைத்துக் கொண்டு மாலையை கோர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு துளி கூட சந்தேகம் இல்லாமல் முழு மனதுடன் துர்க்கை அம்மனை நினைத்து இப்படி நெல்லிக்கனி மாலை சாற்றி வழிபடுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரிக்க பரிகாரம்

மகாலட்சுமிக்கு உகந்த நெல்லிக்காயை துர்க்கை அம்மனுக்கு முழு நம்பிக்கையுடனும் பக்தியுடன் வழங்குவதன் மூலம் நம்முடைய வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேறும்.

சற்று முன்