மனிதனின் தீர துயரத்தில் இருக்கும் பொழுது தூக்கி தாங்க கூடிய சக்தி வாய்ந்த தெய்வங்களில் முதன்மையானவர் சிவபெருமான். ஆகையால் தான் இன்று அளவும் சிவ வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் குறைவதில்லை. அப்படியான சிவபெருமானினை நம் சில வழிகளில் வழிபடும் போது நம்முடைய துயரம் விரைவில் தீரும் என்று சொல்லப்படுகிறது அதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துன்பம் தீர்ந்து இன்பமாய் வாழ பிரதோஷ தின வழிபாடு
பிரதோஷ வழிபாடு என்றாலே நம்முடைய சகல துன்பங்களும் தீர செய்யக் கூடியவை தான். அதிலும் கர்ம வினையால் ஏற்படக் கூடிய துன்பங்கள் தீர இந்த பிரதோஷ வழிபாடு அதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அப்படியான பிரதோஷம் வரக் கூடிய நாள்களை பொறுத்து அதன் முக்கியத்துவம் அமையும்.
இன்றைய பிரதோஷமானது சிவபெருமானுக்கே உரிய திங்கட்கிழமையில் வந்துள்ளது. அதுவும் வளர்பிறை பிரதோஷம் வளர்பிறையானது நம்முடைய வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் கஷ்டங்கள் தீர்ந்து இன்பங்களும் செல்வங்களும் வளர்வதற்காக வணங்கப்படும் நாள். அத்தகைய நாளில் சிவபெருமானை நாம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
இன்றைய நாளில் வாய்ப்புள்ளவர்கள் கட்டாயம் பிரதோஷ வேளையில் சென்று சிவ வழிபாடும் சிவ தரிசனமும் செய்ய வேண்டும் இது மிக மிக முக்கியம். அந்த நேரத்தில் போக முடியாவிட்டாலும் அதன் பிறகு ஆவது ஆலயத்திற்கு செல்ல முயற்சி செய்யுங்கள். இப்போது நாம் வீட்டில் இருந்து செய்யக் கூடிய வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். இதற்கு பானலிங்கம் ஆத்ம லிங்கம் போன்ற எந்த லிங்கம் நம் வீட்டில் இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்த லிங்கத்திற்கு இன்று பிரதோஷ வேளையில் பன்னீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பிறகு சிவலிங்கத்தை எளிமையான முறையில் அலங்காரம் செய்து ஏதேனும் எளிமையான நெய்வேத்தியம் வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம் அந்த நேரத்தில் சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் சிவ சிவ சிவாய நம ஓம் என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ணுங்கள். ஒரு வேளை உங்கள் வீட்டில் எந்த லிங்கமும் இல்லை என்றால் சிவபெருமானின் படத்தை வைத்து இந்த வழிபாட்டை செய்யலாம்.
படம் வைத்து வழிபாடு செய்யும் போது பன்னீர் அபிஷேகம் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஆலயத்திற்கு பன்னீரை அபிஷேகத்திற்கு வழங்கி கொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விஷயத்திற்கான முக்கியத்துவம் பெறுவார்கள் சிவபெருமானவர் அபிஷேக பிரிய ஆகையால் அவருக்கு செய்யக் கூடிய ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் நமக்கு பல மடங்கு பலனை திருப்பித் தருபவர்.
இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சுபகாரியத் தடை விலக வழிபாடு
அப்படியான இந்த சிவபெருமானை பிரதோஷ நாளில் எளிமையாக இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீர்வதோடு செல்வ வளத்துடன் வாழக் கூடிய யோகத்தையும் அருள்வார் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையலாம்.