- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் கருஞ்சீரக பரிகாரம்

கடன் தீர்க்கும் கருஞ்சீரக பரிகாரம்

- Advertisement -

வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது திருப்பி கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் தான் கைநீட்டி கடன் வாங்குகின்றோம். கிரெடிட் கார்டில், தேவையே படாத பொருட்களை கூட  வாங்கி குவிக்கின்றோம். ஆனால் ஏதோ ஒரு கெட்ட நேரத்தால் மாதம் மாதம் வந்திருந்த வருமானம் கூட இல்லாமல் போகின்றது.

குடும்ப செலவுக்கு வருமானம் போதாத நிலைமை வந்துவிடும். பிறகு கடனை எப்படி திருப்பி தருவது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி குடும்ப பாரத்தை சுமந்து பண பிரச்சனையில் சிக்கி விடுகின்றோம். வாங்கிய கடனுக்கு, வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு வளர்ந்து நிற்கும். இந்த கடன் பிரச்சனையில் இருந்து எல்லாம் தப்பிக்க வேண்டும் என்றால் வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும் பணத்தை சேமித்து வைத்துவிட்டு தேவையான பொருட்களை வாங்க வேண்டும். பேராசைப்படக்கூடாது இதுதான் முதல் வழி.

- Advertisement -

சரி கைநீட்டி கடன் வாங்கியாச்சு. தலைக்கு மேல் வெள்ளம் போகிறது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பித் தர முடியவில்லை என்பவர்கள் ஆன்மீகம் ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் வெளிவர, சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கடன் தீர பரிகாரம்

பொதுவாகவே கடன் பிரச்சனைக்கு காரணமாக இருப்பது செவ்வாய் பகவான் தான். ஆகவே இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்ய கருஞ்சீரகம் நமக்குத் தேவை. மளிகை கடைகள் நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஓடுகின்ற ஆறு நதி அல்லது சமுத்திரம் எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். இப்போது ஆங்காங்கே மழை பெய்து எல்லா இடத்திலும் தண்ணீர் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே இந்த நேரத்தில், இந்த பரிகாரத்தை செய்ய எந்த கஷ்டமும் இருக்காது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அந்த ஓடுகின்ற நதிக்கரையில் நின்று கொண்டு ஒரு கைப்பிடி அளவு கருஞ்சீரகத்தை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு, உங்களுடைய தலையை வளம் இருந்து இடமாக 6 முறை சுற்ற வேண்டும். கருஞ்சீரகத்தை கையில் வைத்துக்கொண்டு இன்றோடு என்னுடைய கடன் சுமை காணாமல் போக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்து முருகப்பெருமானை வேண்டி, குலதெய்வத்தை வேண்டி அந்த கருஞ்சீரகத்தை அப்படியே ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இவ்வளவுதான் பரிகாரம். 6 வாரம் செவ்வாய்க்கிழமை, தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்கள் கடன் சுமை படிப்படியாக குறைவதை உணருவீர்கள். செவ்வாய்க்கிழமை காலையில் வரக்கூடிய செவ்வாய் ஓரை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். மாலை வரக்கூடிய செவ்வாய் ஹோரை நேரத்தில் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று 2 மண் அகல்விளக்குகளில் நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, கடன் இல்லாத வாழ்க்கையை கொடு முருகா என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வாக்கை உயர்த்தும் முருகன் வழிபாடு

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் முருகனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கி கொடுத்துவிட்டு இந்த விளக்கை முருகன் கோவிலில் ஏற்றி,  முருகனை 6 முறை வலம் வர வேண்டும். இந்த இரண்டு பரிகாரத்தையும் சேர்த்த படி தொடர்ந்து ஆறு வாரம் செய்து வந்தால் உங்கள் கடன் கஷ்டம் குறையும் என்பது நம்பிக்கை. தேவைப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்