புத்தம் புது நோட்டை எடுத்து வந்து, பீரோவில் கட்டு கட்டாக வைத்து தினம் தினம் அதை பார்த்து, ரசித்து, மனதை சந்தோஷப்படுத்திக்கொண்டே இருந்தால், உங்கள் வீட்டில் பணக்கஷ்டமே வராது. கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சேரும். அவ்வளவு பணத்திற்கு புத்தம் புது நோட்டுகளுக்கு நாங்கள் எங்கே செல்வது என்றெல்லாம் குழம்பிக் கொள்ள வேண்டாம்.
வங்கி கணக்கு வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த வங்கியில் சென்று பத்து ரூபாய் நோட்டு கட்டு, ஆயிரம் ரூபாய்க்கு கேளுங்கள், புத்தம் புது நோட்டு தேவை என்று கேட்டால் அந்த, நோட்டை கொடுப்பார்கள். அப்படி வாங்கி பீரோவில் அடுக்கி வைத்துக் கொள்ளலாம். 20 ரூபாய் நோட்டு, 50 ரூபாய் நோட்டு, உங்கள் வசதிக்கு ஏற்ப 1000 ரூபாய்க்கோ, 5000 ரூபாய்க்கோ இப்படி புது நோட்டு கட்டுகளை வாங்கி பீரோவில் அடுக்கி வைத்தால் பணம் அதிகம் சேரும்.
இதை தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள். இதோடு சேர்த்து கஷ்டப்படாமல் சுலபமாக பணம் சம்பாதிக்க ஒரு தாந்திரீக பரிகாரத்தையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஜாதிபத்திரி வசிய திலகம்
இந்த மை தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் ஒரு சின்ன மண் அகல் விளக்கு, கட்டி கற்பூரம் 1, பச்சை கற்பூரம் 1, ஏலக்காய் 3, கிராம்பு 5, ஜாதிப்பத்திரி சிறு துண்டு. ஒரு மண் அகல் விளக்கில் மேலே சொல்லி இருக்கும் பொருட்களை எல்லாம் ஒன்றும் இரண்டுமாக நசுக்கி தூள் செய்து போட்டுக் கொள்ளவும். இந்த துகள்களை அப்படியே நெருப்பைக் கொண்டு பற்ற வைத்தால், பற்றிக்கொள்ளும்.
தீப்பிடித்து எரிந்து இந்த பொருட்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் சாம்பலாக மாறிவிடும். இது கொஞ்சம் ஆறிய பிறகு இதில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு கலந்தால் கருப்பு நிறத்தில் மை உங்களுக்கு கிடைக்கும். இதை பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது வெள்ளி டப்பாவிலோ போட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து விடுங்கள்.
சில்வர் டப்பாவிலோ அல்லது இரும்பு கலந்த டப்பாவிலோ இந்த திலகத்தை வைக்க கூடாது. தினமும் குளித்து முடித்துவிட்டு பணத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மகாலட்சுமியை கும்பிட்டு விட்டு இந்த திலகத்தை எடுத்து நெற்றியில் வைத்து வந்தால் பணவசியம் ஏற்படும். கஷ்டப்படாமல் பணத்தை சுலபமாக சம்பாதிக்கலாம்.
அதற்காக உட்கார்ந்து கொண்டே இருந்தால் பணம் வரும் என்று சொல்லவில்லை. வருமானத்தை சுலபமான பெருக்குவதற்கு வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். அந்த மகாலட்சுமி தாய் உங்களுக்கு காட்டிக் கொடுப்பாள். அதற்கான பரிகாரம் தான் இது. இந்த திலகத்தை ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்.
பெண்கள் மட்டும் மாதவிடாய் நாட்களில் இந்த குங்குமத்தை வைப்பதை தவிர்த்துக் கொள்ளவும். இந்த திலகத்தை குறிப்பாக வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தயார் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் பௌர்ணமி நாளில் வரும் சுக்கிர ஹோரையில் தயார் செய்வது சிறப்பு. ஒரு முறை இந்த திலகத்தை தயார் செய்து வைத்துக் கொண்டால் 48 நாட்களுக்கு அப்படியே பவர் இருக்கும். 48 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இதே போல திலகத்தை எல்லாம் தயார் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
அதிசக்தி வாய்ந்த திலகம் இது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதால் சில பேருக்கு இதன் அருமை தெரியாது. தொடர்ந்து 48 நாள் இந்த திலகத்தை நெற்றியில் வைத்து வாருங்கள். உங்களுக்கே இதனுடைய மகிமை புரிந்து விடும். எல்லோருக்கும் பண வசியம் எளிதில் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை மகாலட்சுமி தாயிடம் வைத்து இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.