- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி அடர்த்தியாக வளர கருப்பு உளுந்து ஹேர் பேக்

முடி அடர்த்தியாக வளர கருப்பு உளுந்து ஹேர் பேக்

- Advertisement -

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தங்களின் முடி அழகாகவும் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக நம்முடைய முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய கருப்பு உளுந்தை எந்த முறையில் பயன்படுத்தி ஹேர் பேக் போட வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

கருப்பு உளுந்தில் இல்லாத சத்துக்களே இல்லை என்று தான் கூற வேண்டும். எலும்பு முறிந்து விட்டாலே கருப்பு உளுந்தை பயன்படுத்தி உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்க முடியும். அந்த அளவிற்கு வலுவானதாக இந்த கருப்பு உளுந்து திகழ்கிறது. அப்படிப்பட்ட கருப்பு உளுந்தை நம்முடைய தலைமுடியில் நாம் ஹேர் பேக்காக போடும்பொழுது பலகீனமான முடி கூட வலுவான முடியாக மாறிவிடும். அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் திகழும். சரி இப்பொழுது ஹேர்பேக் எப்படி செய்வது என்று பார்த்துக் கொள்வோம்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை நாம் இரண்டு முறைகளில் தயார் செய்யலாம். கருப்பு உளுந்தை ஊறவைத்து அரைத்தும் உபயோகப்படுத்தலாம் அல்லது அதை மிஷினில் கொடுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு நமக்கு தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு ஊற வைத்து அரைப்பதை விட இப்படி மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

என்றைக்கு நாம் தலைக்கு குளிக்க போகிறோமோ அன்றைக்கு காலையிலேயே நம்முடைய தலைமுடிக்கு ஏற்றவாறு கருப்பு உளுந்து பொடியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை பேக்காக மாற்றுவதற்கு தயிரை உபயோகப்படுத்த வேண்டும். வேறு எதையும் சேர்க்கக்கூடாது. தயிரை ஊற்றி கருப்பு உளுந்து பொடி நன்றாக கலந்து பத்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு உங்களுடைய தலை முடியை ஒவ்வொன்றாக எடுத்து அதன் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி தலைமுடியின் நுனி வரை தடவ வேண்டும். இதை 20 நிமிடம் தலையில் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் போல் நீங்கள் தலைக்கு குளித்து விடலாம். ஆனால் தலைக்கு குளிக்கும் பொழுது எந்தவித ஷாம்பூ சீவக்காய் உபயோகப்படுத்தக் கூடாது. உளுந்தில் இயற்கையிலேயே ஷாம்புவிற்கு உரிய தன்மை இருப்பதால் அது தலையில் இருக்கக்கூடிய அழுக்குகளையும் எண்ணெய் பசையும் நீக்கிவிடும்.

தலை முடியை ஷாம்பு பயன்படுத்தி குளிப்
பது போல் மாற்றிவிடும் என்பதால் வெறும் இந்த ஹேர் பேக்கில் சிறிது தண்ணீர் ஊற்றி தேய்த்து குளித்தாலே போதும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்த ஹேர் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் வலுவிழந்த முடிகளும் வலிமை பெறும். அடர்த்தியாகும். முடி உதிர்ந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும். முடி உதிர்தல் முற்றிலும் நின்று விடும்.

இதையும் படிக்கலாமே: கண் கருவளையம் நீங்க கிரீம்

மிகவும் சத்து மிகுந்த கருப்பு உளுந்தை நாம் உணவாக உட்கொள்வது போல நம்முடைய தலைமுடிக்கும் பயன்படுத்த நம் உடல் எப்படி உறுதி ஆகிறதோ அதே போல் நம்முடைய தலைமுடியும் உறுதியாகும்.

சற்று முன்