- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஆரோக்கியமான சப்பாத்தி செய்முறை

ஆரோக்கியமான சப்பாத்தி செய்முறை

- Advertisement -

பொதுவாக பலரது இல்லத்தில் இரவு நேரத்தில் சப்பாத்தி செய்து சாப்பிட பழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஒரே மாதிரி சப்பாத்தி செய்வதற்கு பதிலாக ஆரோக்கியமான வெள்ளரிக்காயை சேர்த்து சப்பாத்தி செய்வதன் மூலம் வெள்ளரிக்காயின் சத்துக்களும் ஒரு சேர கிடைத்து பல நன்மைகளை நம்மால் பெற முடியும். குறிப்பாக டயட்டில் இருப்பவர்கள் இந்த சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே எடை குறைப்பை மேற்கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஆரோக்கியமான வெள்ளரிக்காய் சப்பாத்தியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வெள்ளரிக்காயில் பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. விட்டமின் ஏ, பி, சி, கே, மக்னிசியம், காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய் ஆபத்து குறைகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு நல்ல பலன் அளிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். மலச்சிக்கலை நீக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:

  • வெள்ளரிக்காய் – ஒன்று
  • பச்சை மிளகாய் – 4
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • கோதுமை மாவு – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இந்த வெள்ளரிக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது அரைத்த இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இதில் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் லேசாக கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு இதற்கு மேல் எண்ணையை தடவி 20 நிமிடம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். 20 நிமிடம் கழித்து எப்பொழுதும் சப்பாத்தி தேய்த்து சுடுவது போல் தேய்த்து சுட்டு விட வேண்டும். இந்த சப்பாத்தியில் பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தும் சேர்த்திருப்பதால் குழந்தைகள் இதை வெறும் வாயிலேயே சாப்பிட்டு விடுவார்கள்.

மற்ற சப்பாத்திகளுக்கு தேவைப்படுவது போல் சைடிஷ் செய்தும் இதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி வெறும் கோதுமை மாவை மட்டும் வைத்து சப்பாத்தி செய்வதற்கு பதிலாக இந்த முறையில் ஆரோக்கியமான வெள்ளரிக்காயை சேர்த்து சப்பாத்தி செய்வதன் மூலம் வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: பாவக்காய் பச்சடி செய்முறை

கோதுமை மாவில் இருக்கக்கூடிய நார்ச்சத்தும் வெள்ளரிக்காயில் இருக்கக்கூடிய நார்ச்சத்தும் ஒன்றாக இணைவதன் மூலம் உடல்குறைப்பு என்பது விரைவிலேயே ஏற்படும். ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சப்பாதியை முயற்சி செய்து பார்க்கலாம்.

சற்று முன்