மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வெள்ளிக்கிழமை சிவன் வழிபாடு மேற்கொள்ளுங்கள். பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபடலாம். வாராக் கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் உங்கள் கையை வந்து சேரும். தடைகள் விலகும். நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செலவு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மன தைரியத்துடன் இருப்பீர்கள். பிரச்சனைகள் எவ்வளவு வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கும். திறமையான பேச்சினால் எல்லா விஷயத்தையும் சாதித்து விடுவீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். பண்டிகையைக் கொண்டாட தயாராகுவீங்க. பண்டிகையை உற்சாகமாக வரவேர்பீர்கள். மனது சந்தோஷத்தில் உற்சாகமாக இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையில் சீரான முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கவனக்குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்கக் கூடாது. அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளவும். அன்றாட வேலையில் மட்டும் இரட்டிப்பு கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். டென்ஷன் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு சேர்ந்து தயாராக துவங்குவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்ன சின்ன சிரமங்கள் வரும். முன்கோபம் வரும். உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று நிதானம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று போராடி ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். எந்த ஒரு வேலையும் கையில் எடுத்தவுடன் வெற்றி அடைய முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும். தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்குவதற்கும் சில பேருக்கு நல்ல நேரம் கைகூடி வரும். மற்றபடி வியாபாரம் வேலை எல்லாம் சுமூகமாக நடக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வீன் விரைய செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தீபாவளி பண்டிகைக்கு, புது துணி, பட்டாசு வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் மேற்கொள்ளலாம். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். சில பேருக்கு சொந்த ஊர் திரும்பி, சொந்த பந்தங்களோடு சேர்ந்திருக்கும் வாய்ப்புகள் அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று இறக்க குணத்தோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆனால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உதவி செய்வதற்கு முன்பு, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் கொடுக்கும் நண்பர்களிடமிருந்து விலகியே இருப்பது நல்லது. செலவுகளை குறைப்பதும் நல்லது.