இன்றைய காலத்தில் இளம் வயதில் இருக்கக்கூடிய நபர்களுக்கு கூட நரை முடி பிரச்சனை என்பது வரத்தான் செய்கிறது. பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய நரைமுடி பிரச்சினை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக அளவில் பேரிச்சம்பழம், கருவேப்பிலை, வாழைத்தண்டு போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சத்துக் குறைபாடுகள் நீங்குவதோடு, ஹார்மோன் பிரச்சினையால் நரை முடி பிரச்சனை வந்திருந்தாலும் அவையும் சரியாகும். இதோடு சேர்த்து இயற்கையான முறையில் ஒரு ஹேர் டை தயார் செய்து உபயோகிப்பதன் மூலம் நிரந்தரமான தீர்வை பெற முடியும். அந்த இயற்கையான ஹேர் டை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
இளநரையாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு இந்த ஹேர் டை பயன்படுத்தினால் அவர்களின் இளநரை பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும். இதே 40 வயதிற்கு மேல் ஏற்பட்ட நரையாக இருக்கும் பட்சத்தில் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் அவை கருமையாவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஆனால் மேற்கொண்டு நரைமுடி வராமல் தடுக்க முடியும். அதே சமயம் இந்த ஹேர்டேயும் நாம் பயன்படுத்தும் பொழுது முடி ஆரோக்கியமாகவும் அதே சமயம் கருமையாகவும் தோற்றமளிக்கும்.
இந்த ஹேர் டை தயார் செய்வதற்கு நமக்கு கருவேப்பிலையும், வெந்தயமும் இருந்தால் போதும். கருவேப்பிலையும் வெந்தயமும் இரும்பு சத்து கொண்டது. அதோடு மட்டுமல்லாமல் இது நம்முடைய தலைமுடிக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை தரவும் உதவுகிறது. முடி உதிர்தல் பிரச்சனையும் நீக்கும். முடி நரைப்பதை தடுக்கும். முடியை அடர்த்தியாக வளரச் செய்யும். அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருட்களை வைத்து நாம் ஹேர் டை தயார் செய்து பயன்படுத்தினோம் என்றால் முடி கருமையாவதோடு இந்த பலன்களும் நமக்கு கிடைக்கும் என்பதால் ஒரே கல்லில் பல மாங்காய் என்று கூட நாம் சொல்லலாம்.
இந்த ஹேர் டை தயார் செய்வதற்கு முதலில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
வெந்தயம் நன்றாக சிவக்க வறுபட வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலையையும் அதில் சேர்த்து கருமையாகும் வரை நன்றாக வறுக்க வேண்டும். புகை வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். அப்படி புகை வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை நாம் அப்படியே ஒரு ஏர் டைட் கண்டைணரில் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
எப்பொழுது வேண்டுமானாலும் இதை நாம் நம்முடைய தலைக்கு ஹேர் டை ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஹேர் டை யாக பயன்படுத்துவதற்கு நம்முடைய தலைமுடிக்கு தேவையான அளவு பொடியை எடுத்து ஒரு மிக்ஸிங் பவுலில் போட்டுக்கொள்ள வேண்டும். இதை டையாக மாற்றுவதற்கு நாம் தலைக்கு உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெயைவே சேர்த்து நன்றாக கலந்து நரைமுடி இருக்கும் இடத்தில் தடவி கொள்ள வேண்டும். மறுபடியும் நாம் தலைக்கு குளிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அப்படியே நாம் தலையை சீவி விட்டு நம்முடைய அன்றாட வேலைகளை நாம் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: முடி அடர்த்தியாக வளர கருப்பு உளுந்து ஹேர் பேக்
மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய அதே சமயம் ஆரோக்கியம் மிகுந்த இந்த இரண்டு பொருட்களை மட்டும் வைத்து நம்முடைய தலைமுடிக்கு ஹேர் டை தயார் செய்து தடவுவதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் முடி கருமையாவதோடு அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.