- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்ள ஸ்விட்ச் வோர்ட்

புது விஷயங்களை சீக்கிரம் கற்றுக் கொள்ள ஸ்விட்ச் வோர்ட்

- Advertisement -

எல்லோருக்கும் அறிவு திறன் என்பது ஒரே மாதிரி இருப்பது கிடையாது. சில பேர், புது விஷயங்களை மிக எளிதாக கற்றுக் கொள்வார்கள். சில பேருக்கு புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கும். சில பேரால் என்னதான் முயற்சி செய்தாலும் சில விஷயங்களை கற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்.

உங்களுக்கும் புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஏதாவது சிரமம் இருந்தால், இந்த ஸ்விட்ச் வோர்ட் பயன்படுத்தலாம். இப்போதுதான் பள்ளிக்கூடம் திறந்து இருக்கிறது. மாணவர்கள் புத்தம் புது பாடங்களை படிக்க தொடங்கி இருப்பார்கள். சில பேருக்கு சில பாடங்களை படிப்பதில் சிரமம் இருக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு கணக்கு பாடம், அறிவியல் பாடம் இதெல்லாம் பிள்ளைகளுக்கு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வார்த்தைகளை உச்சரித்து விட்டு, புரியாத பாடங்களை படிக்கும் போது அந்த பாடங்கள் சீக்கிரமாக புரிந்துவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சரி, அந்த இரண்டு வார்த்தைகள் என்ன அதை எப்படி படிக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அறிவுத்திறன் அதிகரிக்க ஸ்வச் வோர்ட்

CARE REACH இதுதான் அந்த வார்த்தை. இந்த வார்த்தையை சொன்னால், புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் குறையும். அதுமட்டுமில்லாமல் செயலிழந்து எதையுமே சிந்திக்க முடியாமல் இருக்கும் உங்களுடைய மூளை சுறுசுறுப்பாக செயல்படும். இப்படி, உச்சரித்த உடனேயே நமக்கு சக்தி ஊட்டக்கூடிய மந்திர வார்த்தைகளை ஆங்கிலத்தில் Switch word என்று சொல்லுவார்கள்.

புது விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு முன்பு உங்களுடைய மனதிற்குள் ஒரு நிமிடம் இந்த வார்த்தையை சொன்னால் போதும். இத்தனை முறைதான் இந்த வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த வார்த்தையை சொல்லலாம். இதை புது வேலைக்கு செல்பவர்களும் சொல்லலாம். மாணவர்களும் சொல்லலாம்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் ஏதாவது புதுசாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அந்த பெண்களும் இந்த வார்த்தையை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த வார்த்தையை சொல்லிக் கொடுங்கள். படிக்கும்போது ஏதாவது சிரமம் இருந்தால், கணக்கு பாடங்களையும் அறிவியல் பாடங்களையும் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தால், அந்த சமயம் ஒரு நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி இந்த வார்த்தையை சொல்லிவிட்டு பிறகு முயற்சி செய்யுங்கள் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால், இந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: ஒட்டுமொத்த கண் திருஷ்டியையும் ஒழித்துக்கட்டும் பரிகாரம்

பிறகு அவர்களுக்கு படிப்பதில் இருக்கும் சிரமங்கள் விலகும். புரிதல் அதிகரிக்கும். இப்போது பள்ளிக்கூடம் திறக்கும் சமயத்தில் இந்த பதிவு நிச்சயம் பெற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்