- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவு அதிகரிக்க வெற்றிலை மஞ்சள் பரிகாரம்

பண வரவு அதிகரிக்க வெற்றிலை மஞ்சள் பரிகாரம்

- Advertisement -

நாம் சிறப்பாக வாழ்வதற்கு கண்டிப்பான முறையில் பணம் என்பது தேவைப்படும். அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவோம். ஒரு சிலர் அல்லும் பகலும் உழைத்து கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அது வீண் விரயமாக மாறிவிடும் அல்லது அவர்களுடைய உழைப்புக்கேற்ற பண வரவை அவர்களால் பெற முடியாத சூழ்நிலை உண்டாகும். இப்படி பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி பணவரவை அதிகரிப்பதற்கு புதன்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு வெற்றிலை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த புதன் கிழமை அன்று பணவரவை அதிகரிப்பதற்காக நாம் பரிகாரம் செய்யும் பொழுது அந்த பரிகாரம் முழுமையாக வெற்றி அடைந்த அதன் மூலம் பணவரவு ஏற்படும். மேலும் புதன் பகவானுக்குரிய அதிதேவதையாக கருதப்படுபவர் பெருமாள். பெருமாளுக்குரிய கிழமைகளில் புதன்கிழமையும் ஒன்று. புதன்கிழமை தோறும் பெருமாளை நாம் வழிபடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பண வரவை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமையை விட புதன்கிழமை பெருமாளை வழிபடுவது என்பது சிறப்பு.

- Advertisement -

அதோடு மட்டுமல்லாமல் புதன்கிழமை என்பது விநாயகருக்குரிய கிழமையாகவும் திகழ்கிறது. விநாயக வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் புதன்கிழமை ஆரம்பித்தால் அவர்களுக்கு உடனே பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த புதன்கிழமை அன்று பணவரவை அதிகரிப்பதற்கு ஒரே ஒரு வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை புதன்ஹோரையில் செய்வது மிகவும் சிறப்பு. நல்ல வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை வாங்கிக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு ஒரு துணியை வைத்து துவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூளை போட வேண்டும். மஞ்சள் தூள் இல்லாதவர்கள் கஸ்தூரி மஞ்சள் தூளை கூட உபயோகப்படுத்தலாம். அடுத்ததாக பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பச்சை கற்பூரம் சிறிதளவு எடுத்து நுணுக்கி அந்த மஞ்சளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை குழைப்பதற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றி நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வலது கை மோதிர விரலால் இந்த மஞ்சளை தொட்டு அந்த வெற்றிலையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய வேண்டும். ஸ்வஸ்திக் சின்னம் என்பது வாஸ்து ரீதியாக பல பிரச்சினைகளை சரி செய்யக்கூடியது என்றாலும் பணவரவை நாலா பக்கமும் வரவழைக்கக் கூடிய ஒரு அற்புதமான ஆற்றல் இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு இருக்கிறது. இந்த சின்னத்தை வெற்றிலையில் வரைந்து விட்டு ஐந்து ரூபாய் நாணயத்தை அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு நடுவில் வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதை உங்களுடைய இரண்டு கையிலும் வைத்துக்கொண்டு பண வரவு அதிகரிக்க வேண்டும்.. வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி மனதார வழிபட வேண்டும். இவ்வாறு வழிப்பட்டு முடித்த பிறகு அந்த வெற்றிலையில் வைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களுடைய பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த வெற்றிலையை உங்கள் வீட்டு நிலை வாசலில் வெற்றிலையின் காம்பில் ஒரு கயறை கட்டி நிலைவாசலில் தொங்கவிட வேண்டும்.

இந்த வெற்றிலை எப்பொழுது காய்கிறதோ அப்பொழுது அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். இது பணவரவை நம்முடைய வீட்டிற்கு ஈர்த்து தரக்கூடிய ஒரு பரிகாரமாக திகழ்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்த முறையில் பரிகாரம் செய்வதன் மூலம் பணவரவு அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாம் கடன் தீர கிராம்பு தாந்திரீக பரிகாரம்

மிகவும் அற்புத ஆற்றல் மிகுந்த பெருமாளுக்கும் விநாயகருக்கும் உகந்த இந்த வழிபாட்டை முழு மனதுடன் செய்பவர்களுக்கு பணவரவு என்பது நான்கு திசைகளில் இருந்து வந்து கொண்டே இருக்கும். இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் இதை செய்து பலன் அடையலாம்.

சற்று முன்