நம்பி ஏமாறுவதுதான் பலரது செயலாக இருக்கிறது. எவ்வளவு தான் ஏமாந்தாலும் யாராவது ஒருவர் கஷ்டம் என்று வந்தவுடன் தங்கள் கையில் இருக்கும் பணத்தையோ, நகையையோ, சொத்தையோ கொடுத்து கஷ்டத்தை சமாளித்துக் கொள்ளுங்கள் என்று கொடுப்பார்கள். ஆனால் அது திரும்ப கிடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்கள் வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் அவர்கள் ஏமாந்த பொருட்களை திரும்ப பெற முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.
கண்கண்ட தெய்வமாக திகழக் கூடியவள் வாராகி அம்மன். வாராகி அம்மன் வழிபாடு என்பது இந்த கலியுகத்தில் மிகவும் சிறந்த வழிபாடு ஆக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனிடம் முழு மனதோடு நாம் வேண்டும் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை நாம் சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் இரவு 9 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அன்றைய தினம் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை ஏற்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு பத்து ரூபாய் நோட்டு வேண்டும். இதோடு ஜாதிக்காய் வேண்டும்.
ஜாதிக்காயின் உள்புறம் இருக்கக்கூடிய விதைகளில் சிறு துண்டு விதைகள் மூன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் வாராகி அம்மனுக்கு முன்பாக தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அந்த பத்து ரூபாய் நோட்டில் ப்ளூ கலர் பேனாவை வைத்து “வஜ்ர வாராஹி” என்று எழுதி நீங்கள் எந்த பொருளை இழந்தீர்களோ பணமோ நகையோ சொத்தோ எதுவோ அதை எழுத வேண்டும். பணமாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு பணம், நகையாக இருக்கும் பட்சத்தில் என்ன நகை, சொத்தாக இருக்கும் பட்சத்தில் எந்த சொத்து என்று எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டாக வஜ்ர வாராகி 5 லட்சம் என்று எழுத வேண்டும். இப்படி எழுதி முடித்துவிட்டு அந்த ரூபாய் நோட்டில் ஜாதிக்காயின் மூன்று விதைகளை வைத்து அந்த ரூபாய் நோட்டை சுருட்டி கொள்ளுங்கள். பிறகு அதில் மஞ்சள் நிற நூலை வைத்து கட்டி விடுங்கள். இதை வாராகி அம்மனின் பாதங்களில் வைத்து விட வேண்டும். தினமும் வழிபாடு செய்யும்பொழுது இந்த ரூபாய் நோட்டீர்க்கும் தூப தீபம் காட்டிவிட்டு வாராகி அம்மன் இடம் விரைவிலேயே அந்த பணம் கைவந்து சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணி ஏழே நாட்களில் அந்த பணமோ நகையோ நம்மிடம் வருவதற்குரிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் கைக்கு அந்த பொருள் வந்த பிறகு இந்த பத்து ரூபாய் நோட்டை அருகில் இருக்கும் அம்மன் ஆலய உண்டியலில் போட்டு விட வேண்டும். ஜாதிக்காயை கால் படாத இடத்தில் போட வேண்டும்.
இதையும் படிக்கலாமே திருப்பதிக்கு செல்ல வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த வாராஹி அம்மனிடம் முழு மனதோடு இந்த முறையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நாம் ஏமாந்த பொருட்களை நம்மால் திரும்பப் பெற முடியும். நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் செய்து பலன் அடையுங்கள்.