நன்மையோ, தீமையோ அது எதுவாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பான முறையில் பணம் என்பது தேவைப்படும். பணத்தை நாம் நினைத்த உடனே சம்பாதிக்க முடியாது. அதற்கான சில சூட்சம வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை பயன்படுத்தி நாம் பணத்தை சம்பாதித்தாலும் அதை நம்முடைய வீட்டில் வைத்து சேமிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். அது வீண் விரயமாக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்காமல் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் செய்யக்கூடிய ஒரு விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விக்னங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். காரிய தடையை நீக்கக் கூடியவராகவும் விநாயகர் திகழ்கிறார் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மைதான். அப்படிப்பட்ட விநாயகருக்கு நாம் பல வழிபாட்டு முறைகளை பின்பற்றி வழிபடுகிறோம். பல வேண்டுதல்களுக்காகவும் அவரை நாம் வழிபடுவோம். அப்படிப்பட்ட விநாயகரை நாம் எந்த முறையில் வழிபட்டால் நம் வீட்டில் இருக்கக் கூடிய செல்வம் நிலையாக நிலைத்து இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
நாம் நம்முடைய வீட்டிற்குள் வருவதற்கு நிலைவாசல் எந்த அளவிற்கு உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய செல்வமும் நம் வீட்டிற்குள் வருவதற்கு நிலை வாசல் முக்கிய காரணமாக திகழ்கிறது. நிலைவாசல் எந்த அளவிற்கு மங்களகரமாகவும், பக்திமயமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு வீட்டில் தெய்வத்தின் சக்தி என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட நிலை வாசலில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பணம் வீண்விரயமாகாமல் சேமிப்பாக பல மடங்கு உயர ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்பொழுது என்ன பரிகாரம் என்று தெரிந்து கொள்வோம். ஒன்றுமே இல்லை. பிள்ளையார்பட்டி விநாயகர் படத்தை வாங்கி வந்து வீட்டு நிலை வாசலில் மாட்டி விட வேண்டும். பிள்ளையார்பட்டி விநாயகர் படம் இல்லை என்று நினைப்பவர்கள் வெட்டி வேரில் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வைக்க வேண்டும்.
பிள்ளையார்பட்டி விநாயகரின் படம் கிடைத்திருக்கிறது என்னும் பட்சத்தில் சிறிது வெட்டிவேரை எடுத்து விநாயகரின் படத்திற்கு வைத்து விட வேண்டும். நம்முடைய நிலை வாசலில் இப்படி விநாயகரின் படத்தை வைப்பதால் நமக்கு எப்படி செல்வம் நிலைத்திருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
விநாயகர் என்பவர் கேது பகவானுக்குரிய தெய்வமாக திகழ்கிறார். கேது பகவான் தான் தடைகளை ஏற்படுத்தக் கூடியவர் அதனால் விநாயகர் பெருமானை நாம் வழிபட்டோம் என்றால் கேதுவால் ஏற்படக்கூடிய தடைகள் நீங்கும். அதனால்தான் காரியத்துடைய நீக்குவதற்கு விநாயகப் பெருமானை நாம் தடைகள் நீங்க வழிபடுகிறோம். கேதுவின் அம்சம் பொருந்திய விநாயகப் பெருமானை நம்முடைய நிலை வாசலில் நாம் வைப்பதன் மூலம் அந்த இடத்தில் ஒருவித தடை ஏற்படும்.
வீடு என்பது சுக்கிரனுக்கு உரிய இடமாக கருதப்படுகிறது. அதாவது தங்கம், வெள்ளி, பணம் போன்றவை சேர்த்து வைக்கக்கூடிய இடமாக திகழ்கிறது. நிலை வாசலில் நாம் கேதுவின் அம்சம் பொருந்திய விநாயகப் பெருமானை வைப்பதன் மூலம் நம் வீட்டிற்குள் வரக்கூடிய சுக்ரன் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் தடைப்பட்டு உள்ளேயே நின்று விடுவாராம். அதனால் நாம் சம்பாதிக்கும் பணமானது நம்முடைய வீட்டிலேயே தடைப்பட்டு தங்கி விடுமாம்.
அப்படி தடைப்பட்டு தங்கும் பொழுது என்ன ஆகும்? அது சேமிப்பாக உயரும். அதனால்தான் பலரும் தங்களுடைய இல்லத்தின் நிலை வாசலில் விநாயகரின் படத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா? இந்த சூட்சமம். இப்படி நாம் நிலை வாசலில் மாட்டி வைத்திருக்கும் விநாயகப் பெருமானுக்கு தினமும் ஊதுபத்தி பொருத்தி வைக்க வேண்டும் அல்லது சாம்பிராணி வைக்க வேண்டும்.
அடுத்ததாக அவருக்கு மலர்கள் வைக்க வேண்டும். குறிப்பாக சதுர்த்தி திதி அன்றும் பௌர்ணமி திதி அன்றும் நிலை வாசலில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கு வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு மேலும் பல அற்புதமான நன்மைகள் நடைபெறும்.
இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக 7 கிராம்பு பரிகாரம்
இந்த சூட்சுமத்தை நீங்களும் நம்பிக்கையுடன் பயன்படுத்தி செல்வத்தை வீட்டில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.