வாராகி அன்னையின் பரிபூரண அருளைப் பெற இதை விட சிறந்த நாட்களை நம்மால் தேர்ந்தெடுக்கவே முடியாது. 6-7-2024 முதல் 15-7-2024 ஆஷாட நவராத்திரியானது கொண்டாடப்பட இருக்கிறது. வாராகி பக்தர்களுக்கு இந்த நாள் ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது. நீங்கள் வாராகி அன்னையை வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். எங்களுடைய வீட்டில் வாராஹி திரு உருவப்படம் இல்லை என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நிச்சயம் அந்த அன்னையின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
ஆஷாட நவராத்திரி இருக்கக்கூடிய இந்த 10 நாட்களும் வீடு சுத்தபட்டமாக இருக்கட்டும். வீட்டில் வராகி அம்மனின் திருவுருவப் படம் இருந்தால் அதை ஒரு மனப்பலகையில் தனியாக அமர வைத்து விளக்கு ஏற்றி இந்த பாடலை படியுங்கள். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் அம்மனின் திரு உருவப்படத்திற்கு முன்பாகவே ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கலாம்.
இந்த 10 நாட்களும் காலை மாலை இரு வேலையையும் அந்த வாராகியின் அன்னையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாராஹிக்கு ஒரு டம்ளர் பானக நீர் ஆவது நெய்வேதியானமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பத்து நாளும் இந்த வாராகி அன்னையை மனதில் நினைத்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? உங்கள் எதிரிகள் தொல்லையை அந்த வாராகிதாய் பார்த்துக் கொள்வாள். எதிரிகள் உங்களை விட்டு தானாக விலகி விடுவார்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. வாழ்க்கையில் நிரந்தரமாக சந்தோஷமே இல்லை என்பவர்களுக்கு வெற்றி நிரந்தரமாக தங்கும். உடல் உபாதைகள் தீரும். கண் திருஷ்டி விளக்கும். ஏவல் பில்லி செய்வினை பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய வளர்ச்சி அபரிவிதமாக இருக்கும்.
அபிராமி அந்தாதி
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
அபிராமி அந்தாதியில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் வரிகள் தான் இவை. இந்த பாடலை வாராஹி அன்னையை நினைத்து மனம் உருகி பாடினாலே வேண்டிய வரங்களை நீங்கள் பெற்றுவிடலாம். எளிமையான தமிழ் வரிகளில் கொடுக்கப்பட்ட இந்த பாடலுக்கு சக்தி ரொம்ப ரொம்ப அதிகம்.
இதையும் படிக்கலாமே: முருகனுக்கு வைத்து வழிபட வேண்டிய பொருட்கள்
பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியவில்லை எந்த பூஜையுமே செய்ய முடியவில்லை என்றாலும் சரி, காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த பாடலை ஒருமுறை படியுங்கள். பத்து நாட்களும் தொடர்ந்து வாராகி அன்னையை நினைத்து இந்த வழிபாட்டை செய்தாலே போதும் உங்களுக்கு அம்பாள் அருள் ஆசி முழுமையாக கிடைக்கும்.