அழகு என்ற வார்த்தைக்கு அர்த்தமே பெண்கள் தான். ஆண்களுக்கு கண் திருஷ்டி படுவதை விட, அதிகமாக கண்திருஷ்டியில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். தங்களை பொல்லாத கண் திருஷ்டியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் எளிமையான ஆன்மீகம் சொல்லும் சில குறிப்புகள் இதோ உங்களுக்காக
கண் திருஷ்டி விலக பரிகாரம்
முதலில் பெண்களுக்கு கண் திருஷ்டி வருவதற்க்காண காரணம் அவர்களுக்கு வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்லதை, வெளிப்படையாக அடுத்தவர்களிடம் சொல்லுவதுதான். ஒரு புடவை எடுத்தாலோ, ஒரு நகை எடுத்தாலோ, அதை ரகசியமாய் பயன்படுத்தத் தெரியாது. இந்த புடவையை இன்று புதுசாக வாங்கினேன். இந்த நகையை புதுசாக வாங்கினேன் என்று எல்லோரிடமும் சொல்லி பெருமைப்படும் போதே அவர்களுக்கு உண்டான திருஷ்டி வரத் தொடங்கி விடுகிறது.
பொதுவாகவே கண் திருஷ்டியை கழிக்க கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது படிகார கல். தினமும் குளிப்பதற்கு முன்பு இந்த படிகாரக் கல்லை உடம்பு முழுவதும் தேய்த்து விட்டு பிறகு சாதாரணமாக சோப்பு போட்டு குளித்தீர்கள் என்றால் உங்கள் உடம்பைப் பிடித்த கண் திருஷ்டியானது முழுமையாக நீங்கும். சோப்பு போலவே கடைகளில் படிகார கல் விற்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சின்ன கப் அளவு பன்னீரை ஊற்றி கலந்து அந்த தண்ணீரில் குளித்தால் உடம்பை பிடித்த கண் திருஷ்டி விளக்கும். காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் பெண்கள் கட்டாயம் குளிக்க கூடிய பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல கொஞ்சமாக அரிசி மாவை எடுத்து உடம்பு முழுவதும் தேய்த்து குளியுங்கள். உங்களை சுற்றி நல்ல ஆரா எப்போதுமே செயல்படும்.
அதேபோல காதில் கம்மல், கழுத்தில் செயின், கையில் வளையல், காலில் கொலுசு இந்த அண் கலன்களை எல்லாம் பெண்கள் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். ஆபரணங்களை அணிந்தால் அது அழகு என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் அந்த ஆபரணங்கள் நம்முடைய உடம்பில் எதிர்மறை ஆற்றலை தங்க விடாமல் தடுக்கிறது என்கிறது சாஸ்திரம்.
அதேபோல நெற்றியில் மஞ்சள் குங்குமம் விபூதி இப்படி ஏதாவது ஒரு பொருளை இட்டுக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களுக்கும் கண் திருஷ்டியை தடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது. புது ஆடை, புது நகை, வாசனை நிறைந்த பூக்களுக்கும் எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி இருக்கிறது. அதனால் தான் எந்த விசேஷத்தை வைத்தாலும் அந்த விசேஷத்திற்கு புத்தாடை அணிந்து கொள்ள வேண்டும். ஆபரணங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
எந்த நல்ல விசேஷமாக இருந்தாலும் அந்த இடத்தில் பன்னீருக்கு முதலிடம். கல்யாணத்தில் கூட, எல்லாரையும் வரவேற்பதற்கு பன்னீரை தெளித்து தான் வரவேற்கிறார்கள். இந்த பன்னீர் நம் மீது படும்போது நம்முடைய ஆரா சக்தியானது சுத்திகரிக்கப்படுகிறது. எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நம் உடம்பில் தங்காமல் விலகுகிறது.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
நலுங்கு வைக்க கூடிய இடத்திலும் இந்த பன்னீருக்கு முதலிடம். நலுங்கு வைத்துவிட்டு பன்னீர் தெளித்து ஆசீர்வாதம் செய்வார்கள். இப்படி நம் முன்னோர்கள் வைத்துள்ள எல்லா பழக்க வழக்கத்திற்கும் பின்னாலும் ஒரு உண்மை மறைந்து தான் இருக்கிறது. மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் முறையாக நீங்கள் பின்பற்றினாலே போதும் உங்களை கண்திருஷ்டி அண்டாது.